தூங்காத இரவுகள்

தூக்கம் தொலைத்த பின்னிரவில்துடிக்கும் இதய ஒலி கேட்டேன் நீக்க இயலா நின்பெயரை நீட்டி முழங்கி சொன்னதடி சீக்கு வந்த அண்ணனுடன் சேர்ந்து மருத்துவ மனை சென்றேன் செவிலியர் சீருடை கண்டவுடன் சிந்தையில் உன்உரு வந்தடி காக்கிச்சட்டை தம்பியுடன் கருத்துரை ஒன்று நிகழ்த்திருந்தேன் காந்திஜி மனைவி பெயர்கேட்டு காதுகள் ஆனந்தம் கொண்டதடி காக்கும் கடவுள் கோயிலிலே கண்களை மூடி அமர்ந்திருந்தேன் காதில் கேட்ட பாடலில் உன் கலகல சிரிப்பும் கேட்டதடி பார்க்கபோகும் குழந்தைகட்கு பரிசுப்பொருட்கள் வாங்க சென்றேன் பட்டுத்…

Rate this:

பக்கோடா கீதம்

பக்கோடா போடுவோம் பாயாசம் கிண்டுவோம் பாரதத்தின் பெருமை என்று பாட்டெடுத்து பாடுவோம் பட்டதாரி யாவரும் பலகாரம் செய்யுவோம் நட்டமில்லா நல்லதொழில் நாளைமுதல் பழகுவோம் கொட்டிக்கொட்டி அள்ளிடும் கோடிபாணம் முழுவதும் கட்டுக்கட்டா அரசுக்குக் கப்பம் கட்டி மகிழுவோம் திட்டம் போட்டு உரைத்தவர் திறமையான நல்லவர் கட்டளைகள் குறைவற காக்கும் பெருமை கொள்ளுவோம் நோட்டுபணம் ஆயிரம் ஐநூறைத் தள்ளுவோம் ஏட்டிஎம்மில் ஆயுளும் இருக்கும் வரை நில்லுவோம் மாட்டுக்கறி உண்பதை மடமை என்று சொல்லுவோம் மறுத்து பேசும் யாரையும் மனிதமின்றி கொல்லுவோம்

Rate this:

பஸ் கட்டணம்

ஈ பி எஸ்ஸும் ஓ பி எஸ்ஸும் இணைஞ்சு போட்ட சட்டம் – இது ஏழைகளுக்கு நஷ்டம் ஆபிஸுக்கும் ஆஸ்பத்ரிக்கும் அவஸ்த்தை படுத்து கூட்டம் – இதில் அரசுக்குக் கொண்டாட்டம் கட்டணத்தக்க கூட்டிபுட்டான் கட்டுப்படி ஆகல இஷ்டம் போல யாரும் இப்ப போற இடம் போகல மட்டமான கவருமெண்ட மாத்திபுட்டா தேவல மக்கள் நலம் முக்கியம்னு மந்திரிக்கு தெரியல அஞ்சு ரூபா கூட்டிப்புட்டு அம்பது பைசா கொறைக்கிறான் நஞ்சு விக்கும் கடைய மட்டும் நல்லபடி தொறக்கிறான் எம்ஜியார்…

Rate this:

நாளை நமதே

நேற்றையும் இன்றையும் ஆய்ந்து அறிந்தால் நாளை நமதேபார்த்ததைப் பயின்றதைப் பழகி நடந்தால் நாளை நமதேநிலமும் நீரும் பொதுவெனப் புரிந்தால் நாளை நமதே எனக்கே எனக்கு என்று முந்தாதிருந்தால் நாளை நமதே மூத்தோர் கடனை இளையோர் செய்தால் நாளை நமதே அனைவரும் கூடி தேரை இழுத்தால் நாளை நமதே சலியா மனதுடன் உழைத்து வாழ்ந்தால் நாளை நமதே முனைபவர் கூட்டம் பெருகிவிட்டால் நாளை என்பது நமதே, நமதே கிராமியமே நமது தேசியம் என்றால் நாளை நமதே, நிச்சயம் நமதே…

Rate this:

கவியும் காவிகளும்

கவியும் காவிகளும் கடுஞ்சொற்கள் பேசியதால் புவியியல் ஒரு சண்டை புதிதாக தோன்றியதாம் பூச்செடிக்குள் பிறந்தவளாம் நாச்சியார் அவள் பெயராம் மூச்சாக முகுந்தனையே சுவாசித்து வளர்ந்தாளாம் ஆய்ச்சியள் நான் என்று அவளாக நினைத்துக்கொண்டு அரும்பாவை செய்யுள் அளித்த கவியாளாம் ரங்கத்தில் தூங்குகின்ற செங்கண் மாலோடு சங்கமித்த தாய் என்று எங்குலத்தார் போற்றுவராம் எங்கிருந்தோ ஒரு சிறுவன் ஏளனமாய் இயம்பியதை இங்கு வந்து எடுத்துச்சொல்லி இடுக்கண்ணில் சிக்கினராம் வருத்தம் தெரிவித்தும் வைணவர்க்கு போகவில்லை வாயால் மன்னிப்பு கேளென்று வரிந்து நின்றார்…

Rate this:

ஜல்லிக்கட்டு கீதம்

மாட்டுக்கொரு நீதிகேட்டு மானமுள்ள தமிழங்க வந்தோமய்யா மெரினாவில் கூட்டங்கூடி மெர்சலாக போராட்டம் செஞ்சோமய்யா அண்ணன் தங்கை போல் நாங்க ஒன்னா நின்னோம் அன்பும் பண்பும் தமிழோட கண்ணு என்றோம் பீட்டாவ பின்னோக்கி ஓடவச்சோம் பிடிவாத கவருமண்டும் பேச வச்சோம் ஜல்லிக்கட்டுக்கோர் வந்த தடைய ஒடச்சோம் இன்று துள்ளிக்கிட்டு மாடுவர தழுவி மகிழ்ந்தோம் மாடுபிடி வீரரும் வாடிவாசல்காரரும் கோடிசனக்கூட்டமும் கூடிவந்த வேளையில் கொம்பன் குதிக்க தெம்பன் பிடிக்க தம்பியை போல் இவன் தழுவி அணைக்க மாடும் மறவனும் போடுமிப்…

Rate this:

வையம் வெல்ல யுக்தி

தினகரன் கையில் இரு இலை போனால் கனலில் கருக்குமென கருதியதாரோ? பன்னீர் தெளித்து பழனியில் கொடுத்த பாரதம் ஆளும் பக்தர்கள் கூட்டம் தென்னகம் நோக்கி திட்டம் வகுக்க, தாமரை மலரின் தாளினை தாங்க பாமரனல்ல பழந்தமிழ் மக்கள்! காந்த விசையில் கவிழ்ந்திட மாட்டோம் கமல மலரையும் கைத்தொழ மாட்டோம் தேர்ந்த அறிவுடன் தெளிந்த என் கூட்டம் தேர்தல் அரசியலில் தோற்றிட மாட்டோம் உதித்த சூரியன் உறங்க போனான் எதிர்த்த கையினன் இறங்கி போனான் இலைக்கு உரியவர் இறந்த…

Rate this: