மகாலின் மறுபக்கம்

உலக அதிசயங்களில் ஒன்றாகவும், காதலின் சின்னமாகவும் திகழ்வது நமது பாரதத்திருநாட்டில் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு ஷாஜகான் என்ற மன்னனால் கட்டப்பட்ட தாஜ்மகால் அனைவரும் அறிந்ததே,

எல்லோரும் தாஜ்மகால் பற்றி மிகமிக உயர்வான கருத்துக்களே கொண்டிருப்பர், யானும் அங்ஙனமே, அதே நேரம் சில மாற்றுக்கருத்துக்களும் உள, அதனையும் சற்று சிந்திப்போம்!

தாஜ்மகால் ஷாஜகான் என்ற மன்னன் தன் இறந்துபோன மனைவி மும்தாஜ் நினைவாக நாட்டுமக்களின் வரிப்பணத்திலிருந்து கட்டிய கல்லறை!

இந்த கட்டிடம் கட்டுவதற்கு மட்டும் ஏறத்தாழ சுமார் இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆனதுவாம், அத்தனையும் விலையுயர்ந்த பளிங்குக் கற்கள்!
இறந்துபோன ஒரு பெண்ணிற்காக இப்படி ஒரு மாளிகைக் கட்டியவன் தன் நாட்டு மக்களுக்காக அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகள் கட்டித்த்ந்திருக்கலாமே?

இன்னொரு வருந்த்தக்க செய்தி ஒன்று நம் செவிவழிச் செய்தியாய் இதுகாரும் கேட்டுணரப்படுகிறது, அதாவது தாஜ்மகால் கட்டிய அனைத்து கட்டிடத் தொழிலாளர்கள் ம்ற்றும் உதவித் தொழிலாளர்களின் கை விரல்கள் வெட்டப்பட்டன்வாம்!. இப்படி ஒரு அழகைப் படைத்தவர்கள் இனிமேல் இது போன்றதொரு அழகியக் கட்டிடத்தைப் படைத்திடக் கூடது என்று மன்னன் எண்ணிய காரணத்தால் அக்கொடுஞ்செயல் நிகழ்ந்ததென கூறப்படுகிறது!

ஆக நம் பாரததில் சர்வதிகரமும், சுயநல எண்ணமும் கொண்ட மன்னர்களின் அடையாளமாக தாஜ்மகால் திகழ்கிறது என்பது உண்மை தானே? இது ஒரு உதாரணம் மட்டுமே, இதுபோல் இன்னும் ஏராளமான கட்டிடங்கள் நம் நாட்டில் உள்ளன. கோவில்கட்டுவதை மூடப்பழக்கம் என்று கூறும் கூட்டம் இதனை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறது? இதனைக் கட்டிய மன்னன் ஷாஜகான் மதத்தால் இந்து இல்லை என்பதால் இவர்செய்த்தை மறுப்பதோ, வெறுப்பதோ இல்லை!

தஞ்சைப்பெரிய கோயில் தனிமனித நலன் கருதிக் கட்டப்பட்டது அல்ல. அதன் அழகிற்கும், அமைப்பிற்கும் நிகராக உலகத்தில் எந்த கட்டிடமும் இல்லை.
நாட்டுமக்கள் நலமுடன் வாழ விவசாயம் மேன்மையுடன் நடைபெற நீண்டநாட்கள் நிலைத்திருக்குமாறு தமிழ்மன்னர் கரிகாலன் கட்டிய கல்லனை ஓர் உன்னத கட்டிடம்!
அந்நியநாட்டைச்சேர்ந்த பென்னிகுக் தன் சொந்த சொத்துக்களையும் விற்று, கடன் வாங்கி, பல இன்னல்களைத்தாண்டி கட்டிய முல்லை‍‍‍ப்பெரியாறு அணை ஓர் ஒப்பற்ற சின்னம்.

இத்தகு நற்கட்டிடங்கள் தத்தமது நன்னிலமைதனை இழந்துவருகின்றன. அவற்றை சரிசெய்வதற்கு நமக்கு வக்கு இல்லை!, அது மட்டுமல்ல நல்ல நிலைமையில் இருக்கும் முல்லைப்பெரியாறு அணையை இடிக்க வருகிறார்கள் இடிக்கியினர். அதைத்தடுக்க தயங்குகிறது மத்திய அரசு, முடுக்காமல் முடங்குகிறது மானில அரசு. தேவையானவற்றைக் காப்பாற்ற வக்கில்லாத நாம், தேவைஇல்லாதவற்றைப் போற்றுகிறோம். இதுதானோ கனியிருப்பக் காய் கவர்ந்தற்று?

Advertisements

2 thoughts on “மகாலின் மறுபக்கம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s