“குடி”யரசு மானிலம்

நாட்டு மக்களை நல்வழி படுத்துவேன் என்று ஆட்சி கட்டிலில் அமர்ந்த அரசியல்வாதிகள் நாட்டு மக்களையும்,நாட்டையும் சீர்குலைக்கும் மதுவை தானே தலைமை ஏற்று நடத்து அவலம் வேறு எந்த நாட்டிலும் நடக்காத ஒன்று.இப்படி சீர்கெட்ட செயலை செய்யும் அரசாங்கம் அதை கண்டு அசிங்கம் கொள்ளாமல்,அதனால் கிடைக்கும் வருமானத்தை மிக பெருமையாக மார்தட்டி சொல்கிறது.அதை கைவிட்டால் அதனால் கிடைக்கும் வருமானத்தை எப்படி சீர் செயவது என்று சிந்திக்கும் அளவுக்கு நாட்டு நிலைமை மோசமாகி விட்டது.

டாஸ்மார்க் அரசு நடத்தி அதன் மூலம் 1800 கோடி வரை வருமானம் ஈட்டி வருகிறது.ஆனால் அரசியல் நாகரீகம்,அரசை நடத்தும் திறன்,நாட்டு மக்களுக்காக தன்னையே அர்பணித்த அரசியல்வாதிகளான காமராசர்,கக்கன் போன்றவர்களுக்கு இது போன்று கள்ளுக்கடையை அரசு எடுத்து நடத்த வேண்டும் என்ற யோசனை தோன்றவில்லை ஏனென்றால் மது பல குடும்பங்களை கெடுக்க கூடியது,அதனால் கிடைக்கும் வருமானத்தினால் அரசை நடத்தினால் நாட்டு மக்களை அழித்து அரசு நடத்துவது அவமானம் என்று கருதி அவர்கள் அதை செய்யவில்லை.அவர்கள் நாட்டு நலன் கருதி,நாட்டு மக்கள் நலன் கருதி ஆட்சி செய்தவர்கள்.

ஆனால் இப்போதைய ஆட்சியாளர்கள் தன நலன்,தன மக்கள் நலன் கருதியே ஆட்சி செய்கிறார்கள்.மதுவினால் ஏற்படும் தீமை என்னவென்று மக்களுக்கு எடுத்து கூறி அவர்களை நல்வழிபடுத்த வேண்டிய அரசு,அவர்களின் அழிவினால் கிடைக்கும் வருமானத்தை மிக பெரிதாக நினைக்கிறது.

மக்கள் நலன் கருதும் அரசியல்வாதிகள் என்று வருகிறார்களோ அன்றுதான் நாடு முன்னேறும்,நாட்டு மக்களும் முன்னேற முடியும்.அத்தகைய அரசியல்வாதிகளை மக்கள் தைரியத்தோடு தேர்ந்தெடுக்க வேண்டும்."குடி மக்களை குடி(கார) மக்களாக" மாற்றி அதில் குளிர் காய நினைக்கும் அரசியல்வாதிகளை விரட்டி நமக்காக அரசு நடத்து அரசியல்வாதியை தேர்ந்தெடுப்போம்.
நன்றி : மு. சரவண குமார்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s