இணையதளங்களும் எஸ்.எம்.எஸ் களும்

உலகில் எல்லா நிறுவனங்களும் இணையத்தை வைத்தே தொழில் நடத்துகின்றன. சில அலைபேசிகளை வைத்து நடத்துகின்றன. சில முக்கிய இணையதளங்களை எஸ்.எம். எஸ் மூலமாக அனுக இயலும்!
ட்விட்டரின் செயல்பாடுகளும் எஸ்எம்எஸ் போலதான் உள்ளன. ஒரு ட்வீட்டில் 140 எழுத்துக்கள் மட்டும், ரிடிவீட், ரிப்ளை இவை எல்லாமே எஸ்எம்எஸ் அனுப்புதல், ரிப்ளை, பார்வர்டு ஆகிய செயல்பாடுகளே. ட்வீட்ட 53000 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் அவரவர் அக்கவுண்டில் பதிவேற்றும். நமக்கு பிடித்தவர்களின் அப்டேட்ஸ் எஸ்எம்எஸ் ல் நமது போனுக்கும் வரச்செய்யலாம்!
டிவிட்டரைப் போல பேஸ்புக்கிலும் எஸ்எம்எஸ் சேவை உண்டு. புதிய நட்பு வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதிலிருந்து, லைக் குடுத்தல், கமெண்ட் குடுத்தல், சேட் செய்தல் வரை அத்தனையும் பேஸ்புக் எஸ்எம்எஸ் சேவையில் உண்டு. ஒவ்வொரு எஸ்எம்எஸ் கும் ஒவ்வொரு எண்ணில் அனுப்புகிறது.
கூகுள் பிளஸ்ஸில் அப்டேட் செய்ய எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டிய எண்
9222222222. பேஸ்புக் அளவிற்கு அதிக சேவைகள் இல்லாவிட்டாலும் அப்டேட் மட்டும் சாத்தியம்.
டிவிட்டர் மட்டுமே தமிழ் பாண்ட் எஸ்எம்எஸ் ஐ புரிந்துகொள்கிறது. ஆனால் தமிழ்பாண்ட் செய்தியை அனுப்ப தெரியவில்லை. ???? என்று அனுப்புகிறது. பேஸ்புக், கூகுள்பிளஸ் இதற்கு தலைகீழ். தமிழில் நாம் அனுப்புவதை புரிந்து கொள்ளாது. ஆனால் அவை தமிழில் செய்தி அனுப்பும்.
டிவிட்டர், பேஸ்புக், கூகுள் பிளஸ் ல் எஸ்எம்எஸ் சேவை பெற நமது எண் அந்தந்த தள அக்கவுண்டில் பதிவு செய்திருக்கப்பட வேண்டும்.
தற்போது பேங்க் சேவைகளும் எஸ்எம்எஸ்ல் வளர்ச்சியடைந்து வருகிறது. கூகுளில் தேடுதலுக்கும் எஸ்எம்எஸ்ல் வசதி உண்டு. 9773300000 என்ற எண்ணுக்கு நாம் தேட நினைக்கும் வார்த்தையை எஸ்எம்எஸ் அனுப்பினால் அது இருக்கும் தளங்களை தேடி எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கிறது கூகுள்.
இணையதளங்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவது போல இணையதளத்தில் இருந்தும் எஸ்எம்எஸ் அனுப்பலாம். ஒரு சிறிய சான்று way2sms.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s