மாண்புமிகு அம்மா அவர்களுக்கு…

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு வணக்கம்.

தமிழின் மிக அரிய மந்திரச்சொல் அம்மா. அம்மா என பலகோடி தமிழர்களால் அழைக்கப்படும் ஒரே பெண் நீங்கள் மட்டுமே. தமிழர்கள் தங்களுக்கு ஏராளமான வாக்குகளை அள்ளித்தந்து சட்டமன்றத்தில் அசைக்க முடியாத மாபெரும் சக்தியாக உயர்த்தி வைத்துள்ளனர். தங்கள் திறமைகளைப்பார்த்து பாராளுமன்றமே பயப்படுகிறது. தமிழர் தங்களை தாய் என நினைத்தார்கள். தங்கத்தாரகை என அழைத்தார்கள். தரணியாளும் மகாராணியாக்கி மகிழ்ந்தார்கள். இந்த அப்பாவிப் பிள்ளைகளுக்கு பதவியேற்று ஓராண்டில் நீங்கள் செய்த சேவை ஒப்பில்லாதவை.

பள்ளிக்கல்லூரி மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி, தாய்மார்களுக்கு கிரைண்டர், மிக்ஸி என அள்ளி அள்ளி கொடுத்துக்கொண்டே… இருக்கிறீர்கள்.

தமிழக மக்களின் தாயே! உங்கள் பிள்ளைகள் குடிகாரர்களாக மாறுவது
உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா? டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தில் ஒரு அரசு அதும் உங்கள் தலைமையிலான அரசு இயங்கவேண்டுமா? இருக்கும் மதுக்கடைகளே மூடப்பட வேண்டும் என சிறுவர்கள் நாங்கள் விரும்புகிறோம், தாயார் ஸ்தானத்தில் இருக்கும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

அண்ணா நூலகத்தை முடக்கினீர்கள், கடந்த ஆண்டு சரியான சமச்சீர்கல்வி தருகிறேன் என்று கூறி பள்ளிகளை மூன்றுமாதம் முடக்கினீர்கள். நாங்கள் அறிவாளியாக வளர்வது எங்கள் அம்மாவுக்கே பிடிக்கவில்லையே!

பஸ்கட்டணம், பால்விலை, மின்கட்டணம் போன்ற மனித அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்க அதிகாரத்தில் இருக்கும் நீங்கள் தானே காரணம்?

தலைமைச்செயலக மாற்றம், அடிக்கடி அமைச்சரவை மாற்றம் இவற்றால் பலகோடிக் கணக்கில் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்கிறீர்கள்.

108ஆம்புலன்ஸ் சேவையைக்கூட செயலிழக்க வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் தற்போது தரும் விலையில்லா பொருட்கள் யாவும் வேறொரு தலைவர் முதலிலேயை தருவதாகச் சொன்னவை தானே?

நானும் தெரியாமல்தான் கேட்கிறேன் இந்த ஓராண்டில் அப்படி என்ன தான் செய்திருக்கிறீர்கள்? இவ்வளவு விளம்பரங்கள் தருகிறீர்கள்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s