இராமசாமி நாயக்கரும் சுப்பிரமணிய அய்யரும ்

இருக்குறதெல்லாம் பொதுவா போன பதுக்குற வேலை இருக்காது… என்ற பழம்பெரும் சினிமாபாடல் வரிகளுக்கு ஏற்ப எல்லாருமே பொதுவானவர்களாக இருந்தவரை சுகமாக இருந்தது தேசம். ஆனால் இன்று தேசத் தலைவர்களே சாதி, சமுதாயங்களுக்கு குறுக்கப்படுகின்றனர், அவர்களது சமுதாயத்தால் பதுக்கப் படுகின்றனர்.

தமிழகத்தில் தலைசிறந்த முதலமைச்சராக, பாரத பிரதமரையே தேர்ந்தெடுக்கும் திறன்பெற்றவராக, ஏழைகளுக்காக வாழ்பவராக, சுயநலமற்ற தன்மானச் சிங்கமாக விளங்கியவர் கர்மவீரர் காமராசர் அவர்கள். இன்று அனைத்து நாடார் சமுதாய கல்வி நிறுவனங்களும் கல்விக்கண்திறந்த படிக்காத மேதை காமராசர் பெயரில் தான் இயங்குகின்றன. அதே நேரம் நாடார் அல்லாத எவரும் காமராசரை நினைவில் வைத்திருப்பதாகக் கூட தெரியவில்லை. நாடார் சமுதாயத்தை செர்ந்த சரத்குமார் சொல்லுமளவிற்குக் கூட காமராசர் வளர்த்த காங்கிரசு இயக்கம் கூட
காமராசர்ஆட்சி பற்றி பேசுவதில்லை,

ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து துணிந்து சுதேசி கப்பல்கம்பனி நடத்தியவர், மகாகவி பாரதியாரே பாராட்டிய பண்பாளர், தேச பற்றாளர், தேசவிடுதலைக்காக சிறையில் வாடிய சிங்கம், செக்கும் இழுத்த தங்கம் வ.உ.சிதம்பரனார். இத்தகு தவசீலரைப் பற்றி பிள்ளைமார் சமூகத்தைத் தவிற பிறர் பேசியதாவது உண்டா?

பாஞ்சாலங்குறிச்சி ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழருக்காக கயத்தாறில் கயிற்றில் தொங்கிய கடவுள், ஆனால் அக்கடவுள் இன்றையநாளில் நாயக்கர்களின் நாயகன், மற்றவர்களைப் பொறுத்தவரை அவர் ஒரு விடுதலைப்போராட்ட வீரர். அவ்வளவுதான்!

இப்படி தேசம்காத்த எல்லா தலைவர்களுமே சாதியினரால்
சிறைவைக்கப்பட்டுவிட்டனர், சாதிக்கலவரத்திற்கு பயந்து இவர்கள் சிலைகளும் சிறையில் தான் இருக்கின்றன.

இந்தத் தவற்றிற்கு சாதி அமைப்புகளே காரணம். தத்தமது சாதியைப் பெருமை பீத்திக்கொள்ள இந்த தன்னலமற்ற தலைவர்களுக்கும் சாதிச் சாயம்
பூசிவிட்டனர். விளைவு? பிற சாதியினர் புறக்கனிக்கின்றனர்.

கடையனுக்கும் கடைத்தேற்றம் அளிக்க கோவனத்தோடு சுற்றிய காந்தியடிகள் பாரத தேசப்பிதா. இவர்மட்டும் தமிழராக இருந்தால் தமிழக செட்டியார்வீட்டு விசேசங்களில் காந்தி வீட்டு கல்யாணம் என்று பேனர்கட்டி அவரையும் சாதிக்காரர் ஆக்கியிருப்பார்கள். இமானுவேல்சேகரனார், காமராசர், முத்துராமலிங்கனார், சிதம்பரனார் என்று எல்லா தலைவர்களையும் சாதி சதி செய்து கொண்டிருக்கிறது.

சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க இந்து மதத்தையே எதிர்த்து நின்ற தந்தை பெரியாரை இராமசாமி நாயக்கர் என்றும், சாதிகள் இல்லையடி பாப்பா என பாடி பராசக்தியிடம் சாதிகளற்ற பாரதத்திற்காக வேண்டிய மகாகவி பாரதியாரை சுப்பிரமணிய அய்யர் என்றும் அழைப்பவர்கள் ஏராளம்.

என்று தணியும் எங்கள் சமத்துவ தாகம்?
என்று மலரும் எங்கள் தமிழ்ஈழ தேசம்?

Advertisements

2 thoughts on “இராமசாமி நாயக்கரும் சுப்பிரமணிய அய்யரும ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s