வழிபாட்டுத் தலமா வணிக வளகாகமா?

“ஆயுள் முழுவதும் கோயிலிலேயே காத்துக்கிடக்கும் பிச்சைக்காரர்களின் நிலைமையை வாசலிலேயே பார்த்த பின்னும் உள்ளே இருப்பவர் கடவுள் என்றும், அவர்நமது பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பார் என்றும், எப்படி
நம்புகிறீர்கள்?” என்று ஒரு சிந்தனையாளர் கேட்டார். மனநிம்மதி
பெறுவதற்கும், நல்லெண்ணங்கள் மேலோங்குவதற்கும் அமைக்கப்பட்ட
திருக்கோயில்களுக்கு இன்றையநாட்களில் சென்றால்தான் மன உளைச்சல் ஏற்படுகிறது!

இன்னிசையும், நற்றமிழும், மந்திரசொற்களும் ஒலித்துக்கொண்டிருந்த திருக்கோயில்களில் வியாபார இரைச்சலே ஓங்கி ஒலிக்கின்றது.

கடவுளின்முன் அனைத்து சாதியினரும் சமம் என்றார்கள், ஆலயநுழைவுகள் அதிரடியாக நடத்தப்பட்டன. சாதிய சமத்துவம் கிடைக்க இருக்கும் நேரத்தில் பணத்தால் ஒரு புதிய தீண்டாமை நன்கு வளர்ந்துவிட்டது. ரூ.100க்கு 5 அடி தூரத்தில் தரிசனம், ரூ. 50க்கு 10 அடி தூரத்தில் தரிசனம்,
காசில்லாதவர்க்கு பெருங்கூட்டத்தில் தரிசனம் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்.

இந்த தரிசனசீட்டு வியாபாரம் கோயில் நிருவாகத்தால் நேரடியாக நடைபெறும் போது பூஜைப்பொருள் வியாபாரம் வணிகர்களின் தனித்திறமைகளால் திருக்கோயில் வளாகத்திற்குள் மிக விமரிசையாக நடைபெறுகிறது.

பக்தர்கள் தான் வாங்கும் பொருள் என்னவென்றே தெரியாதபோதும் கட்டாயமாக வாங்க வைக்கப்படுகின்றனர். அதாவது பக்தர்கள் பணம் அவர்கள் அனுமதி இல்லாமலே செலவிடப்படுகிறது!

இங்ஙனம் இன்றைய ஏராளமான இந்துக் கோயில்கள் யாவும் ஒருபெரும் கார்பரேட் நிறவனம் போலதான் இயங்குகின்றன. கோயில்களின் உண்டியல் வருமானத்தை வைத்தே அரசாங்கம் கூட முன்னுரிமை அளிக்கிறது. மக்களுக்கு வரம்தர வந்த கடவுள் வணிகர்களுக்கும், அரசாங்கத்திற்கும் வருமானம் தரும் வேலையைமட்டும் பார்க்கிறார்! எல்லாருடைய பிரச்சனைக்கும் கடவுளை வேண்டலாம், கடவுளே பிரச்சினையானால் என்ன செய்ய?

Advertisements

One thought on “வழிபாட்டுத் தலமா வணிக வளகாகமா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s