நாத்திகம்பேசுபவன்தான் நல்லதமிழனா?

கடவுள் இல்லை என்று சொன்னார் ஈரோட்டு அய்யா தந்தை பெரியார் அவர்முதல் இன்றைய செந்தமிழன் சீமான் வரையில் அனைவருமே
பகுத்தறிவுசிந்தனையாளர்கள் என்று கூறிக்கொண்டே பரம்பொருளை நிந்தனை செய்கின்றன. இந்து சமய சடங்குகள் எல்லாவற்றையுமே மூடப்பழக்கவழக்கங்கள் என்று கூறிவருகின்றனர்.

இன்றைய நாளில் இந்த பெரியார் பேரன்கள் மட்டுமே தமிழுனர்வோடும், தமிழீழம் மலரவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடும் இருக்கிறார்கள். ஆனால் தமிழர்கள் என்றால் கடவுளைக் கொண்டாடக் கூடாது என்றுதான் இவர்கள் கூறுகிறார்கள்.

உலகின் எந்த இனமும் கடவுள் மறுப்புக்கொள்கை கொண்டவர்கள் இல்லை, எல்லா இனங்களும் நாகரிக வளர்ச்சியடைந்தபோது எதோ ஒரு கடவுளைத் தொழ
ஆரம்பித்திருக்கிறார்கள் அப்படியிருக்க உலகின் மூத்த குடியான தமிழ்க்குடி மட்டும் நாத்திக இனமாக இருக்க முடியும்?

இராமாயணத்தை ஆரிய திராவிட சண்டை என்று பகுத்தறிவாளர்கள்
கூறுகிறார்கள். ராம ராவண சண்டைக்கும், ஆரிய திராவிட சண்டைக்கும் என்ன சம்பந்தம்? ராவணன் எப்போது தன்னை திராவிடன் என்று சொன்னார்?
இலங்கையிலிருந்த அரக்கர்களுக்கும் தென்னிந்திய குரங்குகளுக்கும்தானே அங்கு சண்டை நடந்தது. அப்படி இராவணனர் ஒரு திராவிடன் என்றால் அவர் சிவபக்தன் ஆயிற்றே? அப்படியானால் திராவிடர்கள் அனைவரும் சிவனடியார்களா?

இன்றைய திராவிட இயக்கங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடும் தமிழர்களின் தலையாம காவியமாகிய சிலப்பதிகாரம்தான் உண்மையிலேயே ஆரியதிராவிட சண்டையை சித்தரிக்கிறது. சிலம்பின் மூன்றாம் காண்டத்தில் சேரன் வட இந்திய அரசர்கள் மீது படைஎடுத்து அவர்தம் தலையில்வைத்துக் கொணர்ந்த கல்லால் கண்ணகி கோயில் கட்டப்பட்டதாக சேரனின் புகழ் பாடுகிறது சிலம்பு. அதே சிலப்பதிகாரத்தில் இந்து வைணவக் கடவுளான கண்ணபிரானை ஆய்ச்சியர்குரவையில் பாடுகிறார், இந்து சைவக்கடவுளான முருகப்பெருமானைக் குன்றக்குரவையில் பாடுகிறார்.

சிலப்பதிகாரத்தைக் கொண்டாடுபவர்கள் கண்ணனையும், கந்தனையும் பாடிய இளங்கோவடிகளைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?

கடவுள் இல்லை என்று சொல்லும் கருப்புச்சட்டைக்காரர்களுக்கும் கடவுள் அருள்புரியட்டும், தமிழர்களே உங்கள் தலைவர்களுக்கு மேல் இருக்கும் தலைவனை மறவாதீர்கள்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s