நாசமா போகுது தேசியத்தொழில்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வார்
என்று சொன்ன பொய்யாமொழிப் புலவரின் வாக்கு இன்று பொய்யாகிப் போனது. விவசாயிகள் மட்டுமே மற்ற தொழில் செய்வோரிடம் கையேந்தி நிற்கின்றனர். ஒரு நாட்டின் தேசியத் தொழிலை அந்நாட்டு அரசாங்கமே அழிக்கும் அவலம் பழம்பெருமை மிக்க பாரதத்தில் மட்டுமே!

முந்திய தி.மு.க அரசு நிலமில்லா ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் இலவசம், விவசாயக் கடன் அறவே தள்ளுபடி என்ற வாக்குறுதிகளைக் கூறி பதவியேற்றது. அந்த தி.மு.க வினர் மீது தான் நில அபகரிப்பு வழக்குகளும், ஊழல் வழக்குகளும் ஏராளமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன.

மாற்றம் வேண்டி வாக்களித்த மக்களுக்கு அ.தி.மு.க அரசு வழங்கியது தலைமைச் சேயலக மாற்றம், அண்ணா நூலக மாற்றம் இவைதான். ஆடு தருகிறேன் என்று சொன்னவர்கள் இதுவரைக் கோழியைக் கூட தரவில்லை.

இருபெரும் திராவிடக் கட்சிகளும் விவசாயிகளுக்கு உண்மையில் வழங்கியது மின்தடை தான்! விவசாயத்திற்கு வழங்கும் மின்சாரத்திற்கும் வீட்டு உபயோக மின்சாரத்திற்கும் சொற்ப மின்சாரம், தமிழகத்தில் இயங்கி வரும் அந்நிய தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் 24மணி நேர தடையில்லா மின்சாரம், அதும் மத்தியத்தொகுப்பில் இருந்து (பிச்சையெடுத்து) வாங்கி தருகிறது தமிழக அரசு.

விவசாயிகளுக்காக ‘உழவர் பாதுகாப்புத்(?)’ திட்டத்தை வழங்கியவர்கள் விவசாயம் நிலைத்திருக்க ஆக்கப்பூர்வமாக ஏதும் செய்யவில்லை.

விவசாயத்தை விழுங்கிவரும் ரியல் எஸ்டேட் தொழிலை கட்டுப்படுத்த யாரும் இல்லை. அதே நேரம் விவசாய நிலங்களில் பிற தொழில் நிறுவனங்கள் தொடங்க அனுமதி மறுப்பதும் இல்லை.

விவசாயத்தை நசுக்குவதில் மத்திய அரசு மட்டும் குறைந்தது அல்ல. மற்ற தொழில்கள் பெருகுவதற்காக நல்ல நிலைமையில் இருந்த ஏராளமான விவசாய நிலங்களை அழித்து மிக அகலமாக சாலைகள் அமைத்தார்கள். அந்த சாலைகள் அமைக்கப் பட்டவுடன் அவற்றிற்கு அருகிலிருந்த வயல்களும் கட்டிடங்களாக மாறிவிட்டன.

மகாத்மா காந்தி பெயரில் நூறு நாள் வேலை உறுதித் திட்டம் வழங்கினார்கள். இத்திட்டம் வந்தபின் வயல்வெளிகளில் உண்மையாக உழைத்தவர்களும் ஊழல்செய்யப் போய்விட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை!

இந்தியாவில் வளரும் மரங்களுக்கு, இங்கு விளையும் பழங்களுக்கு, பயிர்களுக்கு இவை எப்படி இருக்கும் என்றுகூட தெரியாத வெளிநாட்டரசுகள் காப்பீட்டு உரிமம் பெற்றுவைத்திருக்கின்றன.

விவசாயிகள் மட்டும் தங்கள் உற்பத்தி செய்த நெல்லுக்கு,
பருத்திக்கு, பழம், காய்கறிகளுக்கு விலையை நிர்ணயம் செய்ய இயலாது. ஆனால் விலைவாசி உயர்வால் பாதிக்கப் படுவது ஏழைகளான விவசாயிகள் மட்டுமே.

இந்தியா அதன் கிராமங்களில் வாழ்கிறது என்று மகாத்மா கூறினார். ஆனால் இன்றைய இந்திய கிராமங்களில் காந்தியைப் போன்ற தாத்தாக்கள் மட்டுமே வாழ்கிறார்கள். இளைஞர்களும், சிறுவர்களும் படிப்பு வேலைகளுக்காக நகரவாசியாகிவிட்டனர். விவசாயம் செய்ய புதிய தலைமுறையில் ஆள் இல்லை.

இயந்திரங்களின் உதவியால் விவசாயம் நடைபெறுகிறது, அந்த
இயந்திரங்களின் உற்பத்திக்காக விவசாய நிலங்கள் அழிக்கப்படுகிறது.

இனி இந்திய தேசியத் தொழில் விவசாயமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இங்கு விவசாயமே சாத்தியம் இல்லை. உலகத்திற்கு சோறுபோட்ட தொழில் உயிருக்கு போராடுகிறது. காப்பாற்ற வாருங்களேன்!

Advertisements

One thought on “நாசமா போகுது தேசியத்தொழில்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s