தமிழ்த்தாய் வாழ்த்து- செய்யுள் விளக்கம்

நாம் பாலர் பள்ளியிலிருந்து பணியில் ஓய்வு பெறும் வரை தினமும் அல்லது அடிக்கடி பாடும் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்து. ஆனால் அப்பாடல்கூட நம்மில் எத்தனைபேருக்கு மனப்பாடமாக தெரியும்? இதோ பாடலும், விளக்கமும். நீராரும் கடலுடுத்த எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் பேராசிரியர் ‘மனோன்மணீயம்’ பெ. சுந்தரம்பிள்ளை.

செய்யுள்:

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!

விளக்கம்:
பூமி என்ற பெண் நீராலான கடலை ஆடையாக அணிந்துள்ளாள்.

அவளின் சிறப்புமிக்க அழகிய முகமாக பாரத கண்டம் (இந்தியா) திகழ்கிறது.

அம்முகத்திற்கு பிறைநிலவு போன்ற நெற்றியாக தக்காணம் அமைந்துள்ளது.

அந்த நெற்றியில் நறுமணமிக்க பொட்டு வைத்தது போல் தமிழகம் உள்ளது.

பொட்டின் மணம் எல்லோரையும் இன்புறச்செய்வது போல் தமிழ்த்தாயும் எல்லாதிசைகளிலும் புகழ்பெற்றவளாக இருக்கிறாள்.

உலகின் மூத்த மொழியாக இருந்தும் இன்றளவும் இளயையாக இருக்கிறாள். தமிழ்மொழியின் வளம் பெருகுகின்றதே தவிற குறையவில்லை. அப்படிப்பட்ட தமிழே, தமிழாகிய பெண்ணே, தாயே உன்னை வாழ்த்துகிறேன். நீ வாழ்க.!

குறிப்பு: இந்திய வரைபடத்தில் நாம் காஷ்மீரை தலையாக வைத்து பார்க்கிறோம். இப்பாடலின் பொருளை உணரவேண்டுமெனில் தென்னிந்தியாவை மேலே வைத்து தமிழகத்தை தலைப்பகுதியாக வைத்து பார்க்க வேண்டும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s