தி.மு.க வின் சிறை நிரப்பும் போராட்டம்


தி.மு.க வின் சிறை நிரப்பும் போராட்டம் அவர்களை மீண்டும் மீட்டு எடுத்துவிடும் என்ற நோக்கில் அறிவிக்கப்பட்டது.ஆனால் அது அந்த அளவுக்கு இல்லாமல் போனது.குடும்ப அரசியலில் சிக்கி தவிக்கும் தி.மு.கவை மீட்டு எடுக்க கருணாநிதி எடுக்கும் முயற்சி அனைத்தும் தற்சமயம் தோல்வியில்தான் முடிகிறது.தோல்வியை கண்டு துவளாத இயக்கமாக இருந்த தி.மு.க தற்போது வாரிசு சண்டையால் துவண்டு பொய் உள்ளது.தி.மு.கவை ஆட்சி கட்டிலில் அமர்த்த அண்ணா பட்ட பாட்டை அனைவரும் அறிவர்.தமிழ் உணர்வின் மூலம் தமிழ் நெஞ்சங்களை தன வசம் ஈர்த்த தி.மு.க இப்பொழுதும் அவ்வாறே மீட்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டது.ஆனால் அவை எல்லாம் கை கொடுக்குமா இல்லை கை விடுமா என்பது எல்லாம் 2014 பாராளுமன்ற தேர்தலில் தெரிந்துவிடும்.மக்கள் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக அரசியல் கட்சியினர் என்ன வேண்டுமானாலும் செய்யும் அளவுக்கு தங்களை உயர்த்தி கொண்டுள்ளனர்.மக்கள் நலனுக்காக ஒரு நலனை செய்ய பெரிதும் அரசியல் கட்சியினர் தன மக்கள் நலனுக்காக எது வேண்டுமானாலும் செய்யும் அளவுக்கு வந்து விட்டனர்.அவ்வாறாக செயல்படும் கட்சிகள் தான் பெரும்பான்மை கட்சிகள் நாட்டில் உள்ளன.தோல்வியை கண்டு கலங்காத இயக்கமாக தங்களை கூறி கொள்ளும் தி.மு.க தோல்விக்காக பயந்து புதுகூட்டை தேர்தலை புறக்கணித்தது ,அதற்காக அவர்கள் கூறிய காரணம் மிகவும் பேதனைக்கு உரியதாக உள்ளது.அவர்கள் ஆட்சியில் நடந்த 10 இடைதேர்தல்களை தேர்தல் ஆணையம் எவ்வாறு கையாண்டதோ அதுபோல் தான் அனைத்து தேர்தலையும் கையாளும்.இதை அறியாதவராக முத்தமிழ் அறிஞர் கருணாநிதி இருக்க வாய்ப்பில்லை.ஏனோ உட்கட்சி சண்டையால் தன இது நடந்திருக்க கூடும் என்பது அனைவரின் யூகமாக உள்ளது.7 கோடி மக்களை ஆண்ட கருணாநிதியால் தான் பெற்ற மக்களை ஆள முடியாமல் போனது வேதனைக்கு உரியது.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் பெயர் பெற்ற தி.மு.க தற்பொழுது 2 தலைமுறை அலைகற்றை மூலம் தன பெயரை இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுமைக்கும் தமிழன் மட்டுமல்லாது இந்தியனின் பெயரையும் கெடுத்தது போதாதென்று தன இயக்கத்தையும் கெடுத்து கொண்டனர்.நிலா அபகரிப்பு மூலம் கைது செய்யப்படும் தி.மு.க வினரை அதன் தலைமை காப்பாற்ற நினைப்பது ஆரோக்கியமான விசயமாக இருந்தாலும் உண்மையான அபகரிப்பாலர்களை கண்டறிந்து அவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கினால் அதை தி.மு.கலக்கம் ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும்.அவ்வாறு செயல்பட்டால் தி.மு.கவின் மதிப்பு கொஞ்சம் காக்கப்படலாம்.தி.மு.க எந்த நோக்கத்திற்காக சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தியதோ ,அது வெற்றி பெற்றதா என்பதெல்லாம் அவர்கள் தலைமைக்குதான் தெரியும்.ஆனால் அதை அ.தி.மு.க கையாண்ட விதம் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாக உள்ளது.ஆனால் இவை எல்லாம் ஆட்சி மாறினால் அரசியல் கட்சியினர் எதிகொள்ளும் வழக்கமான ஒரு செய்கைதான்.இது மக்களை ஏமாற்ற அரசியல்வாதிகள் கையாளும் யுக்திகளில் ஒன்றுதான்.மக்கள் அரசியல்வாதிகளால் ஈமாற்றபடுவது எத்தனை நாள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி : மு . சரவண குமார்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s