அரசியல் சதுரங்கம்

குடியரசுதலைவர் தேர்தல் இம்முறை மந்தமாக தொடங்கினாலும் தற்போது சூடுபிடித்துள்ளது.இதற்கு காரணம் காங்கிரஸ் மற்றும் பாஜ.க தங்களது வேட்பாளரை அறிவித்து உள்ளது தான்.பிரணாப் வெற்றிபெறுவது ஏறக்குறைய வெற்றிபெறுவது உறுதி என்ற போதிலும் சம்பிரதாயத்திற்காக தேர்தல் நடைபெற்று ஆக வேண்டும்.ஆனால் இந்த தேர்தலை அரசியல்வாதிகள் அவர்களின் ஆதாயத்திற்காக பயன்படுத்துவது வெட்ட வெளிச்சமாக தெரிய வந்ததுள்ளது.ஏனென்றால் ஜெயலலிதா,நவீன் பட்நாயக்,மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார்,முலாயம் சிங் யாதவ்,உள்ளிட்டோர் தங்கள் தனிப்பட்ட அரசியலுக்காக பயன்படுத்தி கொள்கின்றனர்.ஜெயலலிதா தன்னை எப்படியாவது தேசிய அரசியலில் ஈடுபடுத்தி கொள்வது என்பதில் உறுதியாக உள்ளார்.அதன் காரணமாக சந்க்மாவை வேட்பாளராக அறிவித்தார்.நித்ஸ்,முலாயம் தங்கள் மாநில நிதியை அதிகரிக்க விரும்பி ஆதரவு வழங்கினர்.அவர்கள் எண்ணிய எண்ணமும் நிறைவேறியது.காங்கிரஸ் கட்சியை ஆட்டி படைக்க வேண்டும் என எண்ணுகிறார் அவர் எண்ணம் இதுவரை நிறைவேறியது.ஆனால் இப்போது முடியாமல் போனது.காரணம் எதிர் கட்சிகள் ஆதரவு அமோகமாக உள்ளதுதான்,காங்கிரஸ் இவர்களை கண்டுகொள்ளாமல் போனதற்கு காரணம்.மாயாவதி தா மீதான சொத்து குவிப்பு வழக்கிற்காக ஆதரவு வழங்கினார்.அவரும் வெற்றிபெற்றுவிட்டார்

பலிக்குமா ஜெ கணக்கு?
தேசிய அரசியலில் குதிக்க இதை சரியான நேரமாக கருதி ஜெ தனது கணக்கை துவக்கியுள்ளார்.சங்கமா ஒரு பழங்குடியினத்தவர் அவரை வேட்பாளராக அறிவிப்பதன் மூலம் மற்ற அரசியல் கட்சிகளை தர்மசங்கடமான நிலைக்கு தால் எண்ணினார்.ஆனால் அவர் எண்ணம் பலிக்கவில்லை.பா.ஜ.க.,பிஜு ஜனதா தளம், போன்ற கட்சிகள்தான் ஆதரிக்கின்றனர்.பா.ஜ.க ஆதர்ர்ரிக்க காரணம் உண்டு.ஏனென்றால் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுபடுத்த பா.ஜ.க., மேற்கொள்ளும் முயற்சிதான் அது.அதே சமயம் தேசிய கட்சியான பா.ஜ.க,. தனது வேட்பாளராக ஒரு மாநில கட்சி அறிவித்த ஒருவரை ஆதரிப்பது அவர்களின் பலவீனத்தை காட்டுகிறது.எது எப்படியோ ஜெ கணக்கு பலிக்குமா என்பதை 2014 பாராளுமன்ற தேர்தலில் பலிக்குமா என்று பார்க்கலாம்

எது மனசாட்சி ?

தற்போது இந்த வார்த்தை குடியரசு தேர்தலில் அதிகமாக பயன்படுத்த படுகிறது.வேட்பாளர்களான பிரணாப் மற்றும் சங்கமா இருவரும் மனசாட்சிபடி வாக்களிக்குமாறு எம்.பி மற்றும் எம்.எல்.ஏ க்களை கேட்டு வருகின்றனர்.கட்சி கட்சி அறிவிக்கும் வேட்பாளரை ஆதரிப்பது மனசாட்சியா?இல்லை அவரை எதிர்த்து வாக்களிப்பது மனசாட்சியா? என்று இருவரும் சிந்தித்து பேச வேண்டும்.ஏனென்றால் இருவரும் மூத்த அரசியல்வாதிகள் அதை அவர்கள் மறவாமல் பேசவேண்டும்.கொறடா உத்தரவு கொடுக்க கூடாது என தேர்தல் ஆணையம்அறிவித்து இருப்பது தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.அதிசயம் நிகழ்ந்தால் தான் தான் வெற்றி பெறமுடியும் என சங்கமா கூறி அவரது தோல்வியை ஒப்பு கொண்டுவிட்டார்.பிரணாப் முகர்ஜிக்கு கிட்டத்தட்ட ௬௦ சதவீத ஓட்டுக்கு மேல் உள்ளது.அதே சமயம் சனமா ஆசை படுவது போல் அதிசயம் நிகழ்ந்தால் ஆச்சரியபடுவதற்கு இல்லை.ஏனென்றால் நம் அரசியல் களம் தற்போது சீர்கெட்டு உள்ளது.

அரசியல் விளையாட்டு:
என்னதான் குடியரசுதலைவரை தேர்ந்தெடுக்க இந்த பாடுபட்டாலும்,அது பெரிய பதவியாக இருந்தாலும் அது ஒரு கௌரவ பதவியாக தான் இருக்க போகிறது.இது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரியும் அப்படி இருந்தும் இவ்வளவு பரபரப்பாக செயல்பட காராரணம்,வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் ,ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க மேற்கொள்ளும் முயற்சிதான்.இவர்கள் போதாதென்று தற்போது இந்திய பிரதமர் பதவிக்கு ஆசைபடும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.உத்திர பிரதேச சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங்க் மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி,பீகார் முதல்வர் நிதிஷ் குமார் என மாநிலத்தை ஆளும் முதல்வர்களுக்கும் ஆசை வந்துவிட்டது.இது இந்திய அரசியலுக்கு நல்லதல்ல.

இந்த முறை வெற்றி பெரும் வேட்பாளராவது இந்திய ஜனநாயகம் தழைக்க ஒரு அடிக்கல்லாக இருந்தது செயல்பட வேண்டும்.அரசியல் ஆதாயத்திற்காக செயல்படாமல் இந்தியா முன்னேற வழிவகுக்க வேண்டும்.இது இந்திய மக்களின் ஆசையாக உள்ளது.

(இந்திய குடியரசுத்தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்க படுகிறார்.அவ்வாறில்லாமல் மக்களால் தேர்ந்தெடுக்க படும் பிரதிநிதியாக என்று அவர் இருக்கிறாரோ அன்று தான் அவரரது செயல்பாடு சுதந்திரமானதாக இருக்கும்.இவ்வாறு தேர்தல் நடந்தால் அரசியல்வாதிகளின் அரசியல் சதுரங்க விளையாட்டு சற்று குறைய வைப்பு உள்ளது)

ஜெயஹிந்த் ஜெயஹிந்த் ஜெயஹிந்த்

நன்றி : மு . சரவண குமார்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s