என்று விடியும் ஒலிம்பிக் கனவு ?

ஒலிம்பிக் துவக்கப்பட்ட காலத்தில் இருந்தே இந்திய மக்களின் கோப்பை கனவை இந்திய வீரர்கள் நிறைவு செய்வதே இல்லை.120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டு மக்களின் பிரதிநிதியாக செல்லும் விளையாட்டு வீரர்கள் தங்கம் வெல்ல வைப்பு இல்லாமல் போய்விடுகிறது.இவர்க பதக்கம் வெல்லாமல் இருக்க காரணம் வீரர்கள் மட்டுமல்ல,அவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படுவதில்லை என்பது தான் உண்மை.அரசியல் தலையீடு அதிகம் இருப்பது,,வீரர்கள் தேர்வில் அரசியல்வாதிகள் தையிடுவதன் மூலம் தகுதியான வீரர்கள் தேர்வு நடைபெறுவதில்லை.தங்கம் அல்லும் நாடுகளான ஜப்பான்,சீனா,அமெரிக்கா,ரஷ்யா போன்ற நாடுகள் ஒலிம்பிக் வீரர்களை முறையாக கண்காணித்து,முறையான பயிற்சியும் வழங்குகிறது.ஆனால் இந்திய ஒலிம்பிக் சங்கமோ வீரர்கள் தேர்வை கடைசி பேரத்தில் தான் செகிறது.

ஹாக்கி மன்னர்கள்:

ஒலிம்பிக் போட்டியில் எதி வெற்றி பெறுகிறதோ இல்லையோ ஹாக்கி ஒன்றில் பெற்றாவது மானத்தை காப்பாற்றி வந்தது.ஆனால் சமீப காலமாக அது ஒரு கனவாகி போனது.ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெறுவதே பெரிய பாடாக உள்ளது.அதற்கு ஹொக்கி கூட்டமைப்பின் ஒற்றுமையின்மையே காரணம்.முறையான தலைமையில் அனுப்புவது இல்லை.அவர்களின் சம்பள தொகை சரியாக வழங்க படுவதி இல்லை.அவர்களுக்கான முறையான பயிற்ச்சியும் வழங்க படுவது இல்லை.அவர்களுக்கான ஆடுகளங்களும் முறையாக அமைக்க படுவது இல்லை.அவர்களுக்கான எதிர்காலமும் சரியாக அமைக்க படுவதில்லை.இதன் மூலம் ஹொக்கி விளையாடும் வீரர்களின் எண்ணிக்கை சரிவை கண்டுள்ளது எனலாம்.தேசிய விளையாட்டான ஹொக்கை மேம்படுத்த வீரர்களின் கூட்டு முயற்சி மிக அவசியம்.இம்முறையாவது தேசிய விளையாட்டின் பெருமை கெடாத வகையில் வீரர்கள் வெற்றி நடை போட்டு வந்தால் இந்திய தேசம் அவர்களை கண்டு பெருமை கொள்ளும்.ஹொக்கி அணியின் தற்போதைய செயல்பாடு திருப்தி தருவதாக உள்ளது.அதனால் வெற்றியுடன் திரும்பினால் nallathu

ஆறுதல் தரும் பாட்மிடன்:

தற்போதைய நிலையில் ஆறுதல் தரும் ஒரே விஷயம் இந்தியன் பாட்மிடன் ஒன்றுதான்.சென்ற முறை தவிர விட்ட தங்கத்தை இம்முறை எப்படியும் சாய்னா நோவல் பெற்று விடுவார் என்ற நம்பிக்கை அனைத்து தரப்பு மக்களுக்கும் உள்ளது.தற்போதைய நிலையில் முதல் நிலை வீராங்கனையாக உள்ள சாய்னா இம்முறை தங்க மங்கையாக வர வேண்டும்.இவர் தவிர ஜுவாலா போன்றவர்களின் ஆட்டமும் தொருப்தி தரும் வகையில் உள்ளது.இம்முறை பாட்மிடனில் சாதிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

குத்து சண்டை தலைமை :

இம்முறை குத்து சண்டை வீரரை தலைமையாக கொண்டு செயல்பட உள்ளது.சென்ற முறை மானம் காக்கும் வகையில் விளையாடிய துறை குத்து சண்டை.தலைமை தாங்கும் சுஷில் குமார்,விஜேந்தர் சிங்க் போன்றோர் நம்பிக்கை அளிக்கின்றபர்.சென்ற முறை சிறப்பாக செயல்பட்டும் தங்கத்தை தவற விட்ட குத்து சண்டை வீரர்கள் இம்முறை அதை கெட்டியாக பிடித்து கொள்வர் என நினைக்கலாம்.

தூள் கிளப்புமா துப்பாக்கி:
தங்கமகன் அபினவ் பிந்த்ரா இம்முறை ஜொலித்தாள் நல்லது.அவரின் முறையான பயிற்சி இந்திய நாட்டிற்கு துணை நரகும்.இவருடன் சகாக்களும் வெற்றிநடை போட்டால் நல்லது.120 கோடி மக்களின் ஆசை எந்த அளவி நிறைவேற்றப்படும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

குழப்பமான டென்னிஸ்:

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடும் ஒரு துறை டென்னிஸ்.ஆனால் இது இம்முறை சற்று வில்லங்கமாக உள்ளது.இரட்டையரில் பயசுடன் விளையாடமாட்டேன் என பூபதி மற்றும் போப்பண்ணா முருத்தது,அதை தொடர்ந்து சானியா மிர்சாவின் மிரட்டல் பேட்டி என,இளம் வீரர் பாம்ப்ரி பயஸ் குறித்து அளித்து அளித்தத் கருத்து என குழப்பம் நிறைந்ததாக துவங்கி உள்ளது.தற்போது ஒரு வழியாக டென்னிஸ் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று பயஸ் விஷ்ணுவர்த்தனிடம் விளையாட ஒப்பு கொண்டது ஆரோக்கியமான விஷயம்.பூபதி,போபண்ணா ஜோடி எப்படி விளையாடுகிறது என்று பொருண்த்திருந்து பார்ப்போம். தவற விட்டு வரும் தங்கத்தை சானியா இம்முறை தட்டி வர வேண்டும் என்பதே இந்திய மக்களின் ஆசை.

வில்வித்தை வில்லாளிகள்:

வில்வித்தையில் இந்திய வீராங்கனைகளின் செயல்பாடு கம்மொன்வீழ்த் போட்டியில் சிறப்பாக இருத்தது.அதை தொடர அவர்கள் முன்வர வேண்டும். கம்மொவீழ்த் போட்டியில் வென்ற பதக்கத்தை ஒலிம்பிசில் பெற முயற்சி செய்ய வேண்டும்.

இது போல இன்னும் பல விளையாட்டுகள் உள்ளன.ஓட்ட போட்டி,நீச்சல் போட்டி,நீளம் தாண்டுதல்,ஜிம்னாஸ்டிக்,சைக்ளிங்,வட்டு எறிதல் என பல போட்டிகள் உள்ளன.ஆனால் இவற்றில் இந்திய அணி கலந்து கொள்வதே பெரிய கேள்வி குறியாக உள்ளது.இதை நிவர்த்தி செய்ய இந்திய ஒலிம்பிக் சன்பம் முயற்சி எடுக்க வேண்டும்.ஒல்ய்மொஇக் போட்டிக்கு ஒதுக்கப்படும் பணம் முறையாக செலவழிக்க படுகிறதா என்பதை அரசு ஆராய வேண்டும்.

இதுவரை மோசமாக இருந்த இந்திய ஒலிம்பிக் வரலாறு லண்டன் ஒலிம்பிக் போட்டியோடு மாற்றப்பட வேண்டும்.ஒலிம்பிசில் இந்தியாவின் செயல்பாடு சிறப்பாக பேசும்படியாக இருக்க வேண்டும்.வரலாறு மாற்றப்பட இந்த ஒலிம்பிசை இந்திய அணி பயன்படுத்தி கொள்ள வேண்டும்.120 கோடி மக்களின் பிரதிபலிப்பாக செல்லும் வீரர்கள் தங்கத்தோடு திரும்பி வர “யாவருங்கேளீர் ” ஒலிம்பிக் வீரர்களை பாராட்டுகிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s