காம்ரேட்களின் இரட்டைவேடம்:

nallakannuஅனுதினமும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போர்ராட்டம் என அறிவித்து விட்டு,எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சி அழைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் கையுக்கு கையாக இருந்து உதவும் காம்ரேட்களின் இரட்டை வேடத்தை மக்கள் உணர்ந்துள்ளனர்.பெட்ரோல் விலை உயர்வு அமலுக்கு வந்தவுடன் போராட்ட அறிவிப்பை வெளிவிட்டு காங்கிரஸ் அரசுக்கு எதிரான அலையை மக்களிடம் புகுத்தி பின்னர் வழி செல்வதை காம்ரேட்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பாலான நேரத்தில் அவர்களுக்கு ஆதரவான நிலையை எடுத்தும் மாநிலத்தில் மாறிவரும் ஆளும்கட்சிக்கு ஆதரவு நிலையை எடுத்தும் காம்ரேட்கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர்.மேற்கு வங்கத்தில் அவர்கள் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்ததற்கு காரணமும் இவர்களின் இரட்டை நிலை போக்குதான் என்பதை உணர வேண்டும்.

தற்போதைய குடியரசு தலைவர் தேர்தலில் இவர்கள் இரட்டைநிலை மேலும் வெளிப்பட்டு உள்ளது.எப்போதும் சிறுபான்மையின மக்களின் தோழன் என சொல்லிகொள்ளும் காம்ரேட்கள்,ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையின,பழங்குடியின தலைவரான சங்க்மாவை ஆதரிக்காமல்,உயர்வகுப்பை சார்ந்த பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கிறது.பா.ஜ.க ஆதரிப்பது தான் பிரச்சினை என்றால் அவர்கள் ஆதரவு கொடுக்கும் முன்பே ஆதரிதிருக்கலாமே? பிரணாப் மேற்கு வங்கம் enஎன்றால் மற்ற மார்க்சிஸ்ட் தோழர்கள் ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன?எந்த குதிரையில் பந்தயம் கட்டினால் லாபம் என்பதை உணர்ந்த பின்னரே,அந்த குதிரை எதுவாக இருந்தாலும் அதை ஆதரிக்க காம்ரேட்கள் தயார்.துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் அல்லாதவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்த மார்க்சிஸ்ட் ஜனாதிபதி தேர்தலில் அந்த கோரிக்கையை வலியுருத்தாத்த்து ஏன்?

காங்கிரஸ் அறிவிக்கும் முன்னரே பிரணாப் வேட்பாளர் என்றால் ஆதரிக்க தயார் என அறிவித்தனர்.பிரணாப் காங்கிரஸ் கட்சியை சாராதவரா? என்பதை காம்ரேட்கள் மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

தமிழ்நாட்டில் காம்ரேட்களின் நிலை:
அனைத்தும் ஒன்றாக இருக்கும் பொது கொள்கையில் ஏற்பட்ட சிறு மாற்றத்திற்காக காம்ரேட்கள் இரண்டாக உடைந்தது.அதை இணைக்க நடந்த பல முயற்ச்சிகள் தோல்வியில்தான் முடிந்தது.அதை மேலும் வலுவூட்டும் விதமாக தமிழ்நாட்டில் சண்டை வலுத்து வருகிறது.தனக்கான தார்மீக உரிமை இருந்தும் அ.தி.மு.க புதுகோட்டை தொகுதியில் இவர்களுக்கு வாயப்பு இருந்தும் அவர்களை புறக்கணித்த அ.தி.மு.க பக்கம் ஒன்றும்,அரசுக்கு எதிராக ஒன்றும் பிரிந்து kidakkirathuஎன்றால் மற்ற மார்க்சிஸ்ட் தோழர்கள் ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன?எந்த குதிரையில் பந்தயம் கட்டினால் லாபம் என்பதை உணர்ந்த பின்னரே,அந்த குதிரை எதுவாக இருந்தாலும் அதை ஆதரிக்க காம்ரேட்கள் தயார்.துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் அல்லாதவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்த மார்க்சிஸ்ட் ஜனாதிபதி தேர்தலில் அந்த கோரிக்கையை வலியுருத்தாத்த்து ஏன்?

அப்துல் கலாம் வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது காம்ரேட்கள் அவரை ஆதரிக்காமல்,வேறு நபரை நிறுத்தினார்கள்.இத்தனைக்கும் அப்துல் கலாம் ஒரு சிறுபான்மையினத்தை சார்ந்தவர்,இந்திய அணுசக்தி வளர்ச்சியை உலகம் உணர காரபனாக இருந்த கலாமை எதிர்த்த காம்ரேட்கள் எந்த அடிப்படையில் தமிழகத்தில் வாக்கு கேட்க முடியும்.இந்த முறையும் அப்துல் கலாமுக்கு வாயப்பு கிடைக்க காம்ரேட்கள் முயற்சி எடுத்திருக்கலாம்.அரசியல் சாராத அப்துல் களம் ,அரசியல் கட்சிகளுக்கு பயப்படாமல் தெளிவான முடிவு எடுப்பதில் வல்லவரான இவரை அமர வைத்தால் அரசியல்வாதிகளின் லங்கா லாவண்யம் வெளிப்பட்டுவிடும் என்பதற்காக அவரை ஒட்டு மொத்தமாக எதிர்த்து விட்டனர்.அன்சாரியை இஸ்லாமியராக பார்ர்க்கும் அரசியல்வாதிகள் அப்துல் கலாமை இஸ்லாமியர்களாக பார்ப்பதில்லை ஏன்?அன்சாரியை சிறுபான்மையினராக பார்க்கும் அரசியல்வாதிகள் அப்துல் கலாமை சிறுபான்மையினராக பார்ப்பதில்லை ஏன்?

மக்களாகிய நாம் இனியாவது நமக்காக உழைக்கும் அரசியல்வாதியை,அரசியல் கட்சிகளை அங்கீகரிக்க வேண்டும்.அப்போதுதான் நாடு நல்ல நிலையை அடைய முடியும்.

(குடியரசு தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சட்டம் இந்தியாவில் அமலுக்கு வர வேண்டும்.அப்போதுதான் மக்கள் விரும்பும் தலைவர் முதல் குடிமகனாக இருக்க முடியும்.அவர்தான் உண்மையான குடியரசு தலைவராக இருக்க முடியும்.)

காங்கரஸ் M L A பீட்டர் அல்போன்ஸ் காரில் சென்றுகொண்டு இருக்கும் போது ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெரியவர் தூங்கிக்கொண்டு இருக்கிறார், அல்போன்ஸ் அந்த பெரியவரிடம் என்ன அய்யா இங்க இருக்குறேங்க என்று கேக்கும் போது ” நேற்று ஒரு அரசியல் கூட்டத்திற்கு போயிருந்தேன் , நாளைக்கும் ஒரு மாநாட்டுக்கு போகணும் கடைசி பஸ்ஸ விட்டுட்டேன். அதன் இங்குண தூங்கிட்டு காலைல எந்திச்சு போகலாம் னு படுத்துட்டேன்” என்கிறார். அல்போன்ஸ் அந்த பெரியவரை தன காரில் வரக்கூபிட்டும் வர மறுத்துவிடுகிறார்.

மேற்கூறிய பெரியவர் தோழர் நல்லகண்ணு ஆவர். எளிமையான அரசியல் வாதிகள் காமராசர், காந்தி அவர்கள் காலத்தோடு முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம். இன்றும் இருக்கிறார்கள்.

இந்தியாவில் ஊழல் கட்சிகளுக்கு கொடுக்கும் அங்கீகாரம் கம்யுனிஸ்ட் போன்ற இடதுசாரிகளுக்கு கிடைப்பதில்லை. மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே என்பது போல மக்களும் ஊழல், சோம்பேறித்தனம் இவற்றிலே பழகிவிட்டார்கள் .

Advertisements

One thought on “காம்ரேட்களின் இரட்டைவேடம்:

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s