கூகுள் தேடுதல் சில வழிகள்

தேடுதல் பிரிவில் இன்று ஒப்பாரும் மிக்காரும் இன்றி இயங்கும் இஞ்சின் கூகுள் சாப்ட்வேர் ஆகும். இந்த தேடுதலிலும் விரைவாக நாம் விரும்பும் தேடுதலை மட்டும் மேற்கொள்ளும் சாதனமாக கூகுளை மாற்றிக் கொள்ளலாம். அதற்கான சில நடைமுறை வழிகளைப் பார்க்கலாம்.

1. மிகச் சரியாக நாம் விரும்பும் சொற்கள் உள்ள இடங்களை மட்டும் கண்டறிய அந்த சொற்களை டபுள் கொட்டேஷன் (“ ”) குறிகளுக்குள் கொடுக்க வேண்டும். எடுத்துக் காட்டாக  Women who love football  என்று கொடுத்தால் 3 கோடியே 46 லட்சம் இடங்களில் உள்ளதாகக் காட்டுகிறது. இதே சொற்களை கொட்டேஷன் குறிப்புகளுக்குள் கொடுத்தால் “Women who love football”  என்று கொடுத்தால் 45,500 இடங்களில் உள்ளதாக முடிவு தெரிவிக்கிறது. இரட்டை மேற்குறிகள் கொடுப்பதன் மூலம் தேவையற்ற முடிவுகளை நாம் நீக்குகிறோம்.

2.“இப்படி ஏதாவது இருந்தால் கொடு”: என்று சில வேளைகளில் தேட வேண்டியதிருக்கும். நாம் என்ன தேடப் போகிறோம் என்பது நமக்கு முழுமையாகத் தெரியாத போது இந்த தேடல் வழி நமக்குத் தேவையாகிறது. இதற்கு ஆஸ்டெரிஸ்க் (*) என்ற நட்சத்திரக் குறியைப் பயன்படுத்தலாம். இது ஒரு காலி இடத்தையும் அதில் எந்த சொல் இருந்தாலும் பரவாயில்லை என்ற பொருளையும் தருகிறது. எடுத்துக் காட்டாக ஒரு ஆற்றின் பெயர் தெரியவில்லை. ஆனால் அதன்மேல் கட்டப் பட்ட பாலம் குறித்து ஒரு கவிதை உள்ளது நினைவில் உள்ளது. எனவே அந்த கவிதையைத் தேடுகையில் வேறு ஆறுகளின் பெயர்கள் வந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துடன் “the bridge on the river*”  என்று தரலாம். நிச்சயமாய் உங்கள் நினைவிற்கு உடனே வர மறுக்கும் அந்த பெயர் பட்டியலில் கிடைக்கும்.

3. குறிப்பிட்ட வெப் சைட் டில் மட்டும் தேட: ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சொல் உங்களைக் கவர்ந்திருக்கும். அது புதுவித சொல்லாய் இருக்கலாம். ஆனால் இணையப் பக்கத்தில் அது எங்கு இருக்கிறது என்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் அந்த வெப் சைட்டில் தான் உள்ளது என்று நினைவில் இருக்கலாம். எனவே அந்த வெப் சைட்டில் மட்டும் தேடும்படி கட்டளை கொடுக்கலாம். எடுத்துக் காட்டாக சிம்பனி என்ற சொல் நோக்கியாவிற் கென யுனிவர்சல் என்னும் நிறுவனத்தின் வெப்சைட்டில் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். இதனை “symphony” site: http://www.univercell.in என்று கொடுத்துத் தேடக் கட்டளை கொடுத்தால் அந்த தளத்தில் மட்டும் தேடி அந்த சொல் எங்கிருக்கிறது என்று காட்டும். இதே போல ஒரு குறிப்பிட்ட தளம் இல்லாமல் மற்றவற்றில் மட்டும் தேடவும் இந்த கட்டளையைச் சற்று மாற்றிக் கொடுக்கலாம். எடுத்துக் காட்டாக நீங்கள் யாஹூ மெசஞ்சர் தொகுப்பை யாஹூ இணையதளம் இல்லாத வேறு தளங்களில் கண்டு டவுண்லோட் செய்திட முடிவெடுக்கிறீர்கள்.

அப்போது “Yahoo messenger” site: yahoo.com  என்று கட்டளை கொடுக்கலாம். இதில் தரப்பட்டுள்ள மைனஸ் (–) அடையாளம் கூகுள் தேடல் சாதனத்தை சொல்லுக்கான முடிவுகளை குறிப்பிட்ட தளத்திலிருந்து மட்டும் தராதே; மற்ற தளங்களில் இருந்து தா என்று கூறுகிறது. இதே போல வெப்சைட்களில் குறிப்பிட்ட வகை தளங்களில் இருந்து மட்டும் தேடு என்றும் வரையறை செய்திடலாம். எடுத்துக் காட்டாக   essay on American history,”     என்பதனைத் தேடி அறிய விரும்புகிறீர்கள். இதனை கல்வி சார்ந்த   (.edu)   தளங்களில் மட்டும் தேடி அறிய என்ற வகையான தளங்களில் மட்டும் தேட விரும்பினால் “Essay on American history” site:.edu  எனக் கட்டளை கொடுக்கலாம்.

4. ஒரு பொருள் தரும் சொற்களைத் தேட: ஒரு சொல் மட்டுமின்றி அந்த சொல்லின் பொருள் தரும் பிற சொற்கள் உள்ள தளங்களையும் தேடி அறிய விரும்பினால் அதற்கான கட்டளைச் சொல்லும் உள்ளது. டில்டே (“~”)  என ஒரு குறியீடு உள்ளது.
எழுத்துக்களுக்கு மேல் உள்ள எண்கள் கீகளுக்கு முன்னால், எண் 1க்கு முன்னால், இந்த கீ இருக்கும். இன்னும் சொல்லப்போனால் இது உள்ள கீதான் கீ போர்டில் முதல் கீயாகும். ஷிப்ட் அழுத்தி இந்த கீயை அழுத்தினால் டில்டே குறியீடு கிடைக்கும். இதனை எந்த சொல்லுக்கான அதே பொருள் தரும் சொற்களைத் தேடுகிறோமோ அந்த சொல்லுக்கு முன் தர வேண்டும். இந்த சொல்லுக்கும் குறியீட்டிற்கும் இடையே இடைவெளி இருக்கக் கூடாது. எடுத்துக் காட்டாக  cover  என்ற சொல்லை (“~cover”) எனக் கொடுத்தால் அந்த சொல் தரும் பலவகை பொருள் உள்ள மற்ற சொற்கள் உள்ள தளங்களும் பட்டியலிடப்படும்.

5. கூகுள் தேடல் தளக் கட்டத்தில் ஒரு சொல்லுக்கான பொருள் அறியவும் கட்டளை அமைக்கலாம். எடுத்துக் காட்டாக   modem  என்ற சொல்லுக்கான பொருள் அறிய விரும்பினால் “define:modem”  எனத் தர வேண்டும். இதற்கு இன்னொரு வழியும் உள்ளது.  “what is” என்ற சொற்களை பொருள் தேடும் சொல் முன்னால் சேர்த்துத் தரலாம். ஆனால் பொருள் தருவது மட்டுமின்றி கூகுள் அச்சொல் இடம் பெறும் மற்ற தளங்களின் பட்டியலையும் தரும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s