கவுண்டமணி – செந்தில்

கவுண்டமணி : டேய் பச்சை மிளகாய் தலையா எங்கடா போயிட்டு வர்றே.

செந்தில் : ஓட்டு போட்டுட்டு வந்தண்ணே.

கவுண்டமணி : ஏன்டா அந்த கருமத்தை போட்டே.

செந்தில் : ஒரு சந்தேகம் அண்ணே.

கவுண்டமணி : எதை வேண்ணாலும் கேளு ஆனா கொழந்த எங்கேர்ந்து வந்துதன்னு மட்டும் கேக்காதே.

செந்தில் : இல்லை அண்ணே எலெக்ஷன்னா என்ன அண்ணே.

கவுண்டமணி : அப்படி வாடி. இந்த ஆல்-இன்-ஆல் அழகுராஜாவோட அறிவைப்பத்தி தெரிஞ்ச ஒரே ஆள் நீதான்டா.

செந்தில் : சொல்லுங்கண்ணே.

கவுண்டமணி : அது எலெக்ஷன் இல்லை கலெக்ஷன். காசு பண்ற வேலைடா லக்ஷ்மி வெடி வாயா.

செந்தில் : அப்ப ஏன்ணே கையில கறுப்பு புள்ளி வெக்கறாங்க.

கவுண்டமணி : அப்படி கேளுடா. டேய் எத்தனை பேரை முட்டாள் பண்ணோம்னு ஒரு கணக்கு வேண்டாமா அதுக்கு தான்.

செந்தில் : அப்ப 5 வருஷதுக்கு ஒரு தடவை ஆட்சி ஏன்ணே மாறுது.

கவுண்டமணி : டேய் நம்ம தமிழ் மக்களுக்கு அறிவே இல்லைடா. ஒரு கட்சியையே 20 வருஷம் ஆட்சி செய்யவுட்டா அவன் சொத்தை சுருட்டி சோர்ந்து போய் ஒரு வேளை நாட்டுக்கு நல்லது பண்ணுவான்டா. ஆனா நம்ம தமிழ் மக்கள் என்ன பண்றாங்க – 5 வருஷதுக்கு ஆட்சி மாத்தி விடறாங்க. அவன் 5 வருஷம் சம்பாதிச்ச காசை 5 வருஷம் செலவு பண்ணிட்டு மறுபடியும் வந்துடறான் கொள்ளை அடிக்க.

செந்தில் : அதுக்கு என்ன பண்றது அண்ணே.

கவுண்டமணி : அதுக்கு நான் மதுரை வீரனுக்கு கெடா வெட்டி கூழு ஊத்தப் போறேன்.

செந்தில் : கெடா வாங்கிட்டீங்களா.

கவுண்டமணி : டேய் நாட்டுக்காக சொந்த காசு போட்டு கெடா வாங்கறதுக்கு நான் என்ன உன்னை மாதிரி பேறிக்கா மண்டையனா.

செந்தில் : அப்புறம்.

கவுண்டமணி : நான் கெடான்னு சொன்னது உன்னைத் தான்டா ஜார்ஜ் புஷ் வாயா.

Advertisements

2 thoughts on “கவுண்டமணி – செந்தில்

  1. எத்தனை முறை பார்த்தாலும் கவுண்டமணி செந்தில் காமெடி மட்டும் போர் அடிப்பதே இல்லை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s