ஒருங்கிணைந்த இந்து மதம்

இந்துக்கள் அதிகமாக வாழும் இந்தியாவில் தொன்மையான முதல் மதம் இந்து மதம் என்று அனைவரும் நினைக்கின்றோம். ஆனால் புத்த, சமண சமயங்களுக்கு பின்னர் தான் இந்து மதம் இங்கு உருவானது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?. உண்மையில் அரேபிய படையெடுப்புகளுக்கு பின்னர் தான் இங்கு இந்து மதம் உருவானது. உண்மையில் இந்து என்ற சொல்லே முகமதியர்களாகிய அரேபியர்களால் தான் வழங்கப்பட்டது!

herne.jpg

இந்திய வரலாற்றில் நாம் அறிந்துள்ளவரை ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நகரங்களடங்கிய சிந்து சமவெளி நாகரிகமே தொன்மையானதாகக் கருதப்படுகிறது. அங்கு பசுபதி , பிரஜாபதி , விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரையும் பெண் தெய்வங்களையும் வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. ஆனால் அங்கு கடைபிடிக்கப்பட்ட மதம் இந்துமதம் என அழைக்கப்படவில்லை. காலப்போக்கில் இந்திய நாட்டில் சிவனை வழிபாடும் சைவமதம் , விஷ்ணுவை வழிபாடும் வைஷ்ணவ மதம் ஆகியவை நன்கு வளர்ந்தன. அதே நேரத்தில் சூரியன் , முருகன் , விநாயகர் மற்றும் சக்தி ஆகிய கடவுளர்களை நாயகமாகக் கொண்டும் மதங்கள் இருந்தன. ஆகமொத்தம் இந்தியாவில் முற்காலத்தில் ஆறு மதங்கள் இருந்தன. பின்னர் மெல்ல மெல்ல இந்த ஆறு மதங்களின் நாயகக் கடவுளர்களுக்கு இடையில் உறவுமுறைகள் வழங்கப்பட்டு சமய சகிப்புத்தன்மை மலர்ந்தது .
200px-Shiva_Pashupati.jpg
அரேபியர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தனர். அப்போது இன்றைய இந்தியா மற்றும் பாகிஸ்தான் பல சிற்றரசுகளாக சிதறிக் கிடந்தன. அரேபிய மொழியில் "சி" என்ற எழுத்து இல்லை. அவர்களுக்கு " சி " உச்சரிக்கவும் தெரியவில்லை. சிந்து சமவெளியே அரேபியர்களுக்கு இந்தியாவிற்கு வருவதற்கான நுழைவு வழியாக இருந்தது. சிந்து சமவெளிக்கு இந்தபக்கம் இருக்கும் ஒட்டு மொத்த நிலப்பரப்பையும் அவர்கள் " இந்து " என்றே குறிப்பிட்டனர். அரேபியர்கள் இந்தியாவின் மீது படையெடுத்தபோது அவர்களின் இசுலாம் மதமும் இங்கு பரவியது. இசுலாமியர்கள் அல்லாத அனைத்து இந்தியர்களையும் அவர்கள்தான் முதன்முதலில் " இந்துக்கள் " என அழைத்தனர்.

" இந்து " என்ற வார்த்தையை வழங்கிய அரேபியர்களைப் பொறுத்தவரை " இந்து " என்ற சொல்லுக்கு சிந்து சமவெளியின் பூர்வகுடியினர் என்று பொருள். முற்காலத்தில் இந்தியாவில் சிந்து முதலிய பல பகுதிகளில் சமஸ்கிருதம் பேசப்பட்டது . சமஸ்கிருதம் காலபோக்கில் மருவி பாலி, இந்தி மொழிகள் உருவானது. " இந்தி " என்ற பெயர் அம்மொழிக்கு வளங்கப்பட்டதர்க்கும் பழைய சிந்து என்ற பெயரே மூல பொருள் ஆகும் .

சைவம் , வைணவம் முதலிய ஆறு மதங்கள் இணைந்து இந்து மதம் உருவானது . இந்தியாவில் தோன்றிய புத்த சமண மதங்களையும் பெருவாரியான இந்துக்கள் ஏற்றுகொள்கின்றனர் . புத்தரை கிருஷ்ணரின் மறு பிறவி என்றும் நம்புகின்றனர் . சில இந்து மத புத்தகங்களில் கிருத்தவம் மற்றும் இசுலாமியம் ஆகிய மதங்களையும் ஒருங்கிணைந்த இந்து மதத்தின் கிளைகளாக குறிபிடுகிண்ட்றனர். ஆக இனி இந்து மதம் என்பது உலக மதம் . உலக தெய்வங்கள் அனைவரையும் தன்னுள் கொண்ட தலைசிறந்த மதம் .
161269_100002347315627_1221917924_n.jpg

Advertisements

One thought on “ஒருங்கிணைந்த இந்து மதம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s