கிருஷ்ணா… கிருஷ்ணா…

உண்மையைத் தேடி...

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத

அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானாம் ஸ்ருஜாம்யஹம் |

பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்

தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே ||

– என கீதையில் மொழிகிறான் கண்ணன்.

எப்பொழுதெல்லாம் தர்மம் குலைகிறதோ, எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை விரித்தாடுகிறதோ, எப்பொழுதெல்லாம் சாதுக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றார்களோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், சாதுக்களை காப்பதற்கும் நான் யுகம் யுகமாக அவதரிக்கிறேன் என்பது இதன் பொருள்.

ஆம். அதற்காகவே இறைவனின் அவதாரங்கள் நிகழ்கின்றன. அவதாரம் என்றால் இறங்கி வருவது என்பது பொருள். தீயவர்களை ஒழித்து பக்தர்களைக் காப்பதற்காக பரம்பொருளான இறைவன் அவதாரமேற்று வருகிறான். அதற்காக ஏற்பட்டதுதான் தசாவதாரம் போன்றன. அந்த தசாவதாரத்திலும் மிக மிக உயர்வாகக் கருதப்படுவது ஸ்ரீ கிருஷ்ணாவதாரம். ஏன்?

மச்ச, கூர்ம, வராக, வாமன, நரசிம்ம, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி அவதாரங்களில் மிக உயர்வாகக் கருதப்படுவது ராம மற்றும் கிருஷ்ணாவதாரங்கள்தான். காரணம், மற்ற அவதாரங்களை விட ராமனும் கிருஷ்ணனும், தாம் ஒரு அவதார புருடன் என்பதை மறந்து மக்களுடன் மக்களாகக் கலந்து பழகி தங்கள் அவதார நோக்கத்தை நிறைவேற்றினர் என்பதால்தான். அதிலும் ராமர் தனது அவதாரச் சிறப்பு வெளிப்படும் காலத்தில், மக்களோடு மக்களாகக் கலந்து வாழ முடியாமல் வனவாசம் புக நேரிட்டு விட்டது. ஆனால் கிருஷ்ணாவதாரத்திலோ அவன் இடைச் சேரியில் பிறந்து ஆய்ப்பாடிச் சிறார்களுடன் ஆடிப் பாடி, விளையாடி…

View original post 174 more words

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s