நாமும் செய்தால் என்ன?

பக்கத்து மானிலம் கேரளாவில் யாரும் குப்பைகளை வெளியே கொட்டக் கூடாது. அவரவர் வீட்டிற்குள் குப்பைதொட்டி வைத்து அதில் குப்பைகளை சேகரித்து வாரமொருமுறை எரித்துவிட வேண்டும். மேலும் பாலித்தீன் பைகள் தடை செய்யப்பட்டிள்ளது. கடைகளுக்கு சென்றால் கட்டாயம் துணிப்பை கொண்டுசெல்ல வேண்டும். அப்படி இல்லையென்றால் காகிதப்பையில் தான் கொண்டுவர வேண்டும்.இந்த திட்டம் நம் மாநிலத்திலும் இருந்தால் ஒவ்வொரு நகர, மாநகரங்களுக்கு அருகிலும் ஒரு நகரத்தின் அளவைப்பொறுத்து நரகக்குழிகள்(குப்பை மேடு) இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

மேலும் அங்கு ஒவ்வொருவரும் தன் வீட்டின் பரப்பளவில் பாதியில் மரம், செடி, கொடிகளுக்கு இடம் கொடுத்துவிட்டு மீதம் இருக்கும் இடத்தில்தான் தங்களுக்கு வீடு கட்டுகிறார்கள்.

மாநிலதலைநகரத்தில் கூட இரவு 7 மணிக்கு மேல் வெளியே யாரும் திரிவது இல்லை.சாலை விதிகளை அனைவரும் முறையாகக் கடைபிடிக்கிறார்கள். எவ்வளவு அவசர வேலையாக இருந்தாலும் யாரும் வேகமாக செல்வது இல்லை.

முல்லைபெரியாறு பிரச்சனையில் அம்மானில முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும் ஒன்றினைந்து குரல் கொடுக்கின்றனர். நமது சிவகாசியில் நடந்த தீவிபத்தில் காயமுற்றவர்களுக்கு அம்மானில நடிகர் மம்மூட்டி தன் மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்கிறார்.

ஒரு சில கோவில்களைத்தவிற பல கோவில்களில் கட்டண தரிசனம் இல்லை.பெரும்பாலான கோவில்களுக்குள் பாரம்பரிய ஆடை அணிந்திருந்தால் மட்டுமே உள்ளே செல்ல முடியும்.

பரசுராம சேத்திரமாகிய கேரளம் "கடவுளின் சொந்த நாடு" என்று அழைக்கப் படுவதில் மிகையில்லை. நாமும் கேரளமாநிலத்தை பின்பற்றினால் என்ன? என்று கேட்கவில்லை.பன்னிரு ஆழ்வார்களும் அறுபத்து மூன்று நாயன்மார்களும் பிறந்து வாழ்ந்த நம் தமிழகம் ஏன் மதுவுக்கு அடிமையாகி, சாதிகளால் சாக்கடையாகி தேவையற்ற பொருட்களின் மீது மோகம் கொண்டு திரிகின்றோம்? விழிதெழுவோம். யாவருங்கேளீர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s