தமிழ் பிரதமர்

மத்தியில் எப்படியும் ஆட்ச்யை பிடித்து விடுவோம், ஜெ வை பிரதமர் ஆக்குவோம்,நாற்பதும் நமதே என்ற பலமான கோசத்துடன் இந்த பாராளுமன்ற தேர்தலை அ.தி.மு.க எதிர்கொள்கிறது.கூட்டணிக்காக மற்ற கட்ச்கள் அலைமோதும் போது அ.தி.மு.க மட்டும் தனித்து போட்டி என அறிவித்த செயலாற்றி வருகிறது.தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆகவில்லை அந்த குறையை போக்க ஜெ விற்கு வாக்கு என அ.தி.மு.க முழங்கி வருகிறது.இது சாத்தியமா?தமிழகம் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளை தனியே நின்று கைப்பற்றுமா?

பழைய வரலாறு:

2004 தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளை கைப்பற்றியது.அந்த கூட்டணி வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்த்தது பலமான கூட்டணிதான் என்பதை அனைவரும் அறிவோம்.ஏனெனில் தி.மு.க காங்கிரஸ்,பா.ம.க,இடது மற்றும் வலது சாரிகள்,முஸ்லீம் லீக்,ம.தி.மு.க ஆகிய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட்டன அதன் வெளிப்பாடுதான் 40 தொகுதிகளிலும் வெற்றி.அந்த சமயத்தில் அ.தி.மு.க பா.ஜ.க மட்டுமே ஒரு அணியில் இருந்தன.அடுத்து நடந்த 2008 தேர்தலில் ம.தி.மு.க ,இடது,வலது சாரிகள்,பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் தி.மு.க கூட்டணியில் இருந்து விலகியதன் விளைவு 12 தொகுதிகளை தி.மு.க கூட்டணி இழந்தது.அதி.மு.க கூட்டணி ம.தி.மு.க ,இடது,வலது சாரிகள்,பா.ம.க ஆகிய கட்ச்கலின் உதவியுடன் 12 தொகுதிகளை கைப்பற்றியது.இதன்மூலம் கூட்டணி கணக்குதான் தமிழக அரசியல் வெற்றியை தீர்மானிக்கிறது என்பதை உணர முடியும்.அப்படியிருக்க ஜெ யின் தனித்து போட்டி முடிவு எந்த அளவு வெற்றியை தர போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.2004 போலவே தி.மு.க இம்முறை பலமான கூட்டணி அமைக்கும் என்று எதிபார்க்கப்பட்டது.ஆனால் அந்த கட்ச்யுடன் கூட்டணி வைக்க முன்வரவில்லை.பா.ஜ.க, ஒரு கூட்டணியை முயற்ச்சிக்கிறது காங்கிரஸ் தனித்து விடப்பட்டு இருக்கிறது.தே.மு.தி.க தன நிலையை வெளிப்படுத்தவில்லை.இப்படியொரு சூழலில் நான்கு அல்லாது ஐந்து முனை போட்டி ஏற்பட்டால் வாக்கு சிதறல் காரணமாக அ.தி.மு.க 40 தொகுதிகளை கைப்பற்றிவிட வாய்ப்பில்லை என்று சொல்லிவிடமுடியாது ..

பாதிப்பு ஏற்படுத்துமா பா.ஜ.க அணி:

பா.ஜ.க கூட்டணியில் ம.தி.மு.க ஐ.ஜே,கே,கொங்கு முன்நீற்ற கலக்கம், ஆகிய கட்சிகள் இணைந்துவிட்டது.அடுத்து பா.ம.க இணைவதற்கான சூழல் உருவாகி உள்ளது.தே.மு.தி.கவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதன் தலைவர் விஜயகாந்த் 2 ம் தேதி உளுந்தூர்பேட்டை மாநாட்டில் தன முடிவை அறிவிப்பதாக கூறிவருகிறார்.இந்நிலையில் இந்த கூட்டணி அமைந்தால் அ.தி.மு.க அணிக்கு சவால் விடுமா?என்றால் வாய்ப்பு இருக்கிறது.கன்யாகுமாரியில் கூட்டணி கட்சிகள் உதவியுடன் வெல்ல வைப்பு உள்ளது.அங்கு பொன் ராதாகிருஷ்ணன் கடந்த காலங்களில் தனித்தே எவ்வளவு வாக்கு பெற்றார் என்பது அனைவரும் அறிந்ததே.அதேபோல் விருதுநகர் தொகுதியில் பொர்ட்டியிடு வை.கோ அவர்களின் வெற்றியும் வசமாகலாம்.ஏனெனில் இங்கு ம.தி.மு.க வுடன் தே.மு.தி.க விற்கும் கணிசமான வாக்கு உள்ளது அதனால் அவர் வெற்றிபெறுவது அவ்வளவு கஷ்ட்டமாக இருக்காது.இவை போக வட மற்றும் மேற்கு மாவட்டங்களில் தே.மு.த.க மற்றும் பா.ம.க இணையும் போதும் ஒரு மாற்றம் உருவாக வாய்ப்பு உள்ளது.இந்த தொகுதிகளில் தி.மு.க பலம் என்பதால் இது அ.தி.மு.க விற்கு சாதகம் தான்.அதே சமயம் கொங்கு மண்டலம் அ.தி.மு.க ஆதரவு பகுதி இங்கு கொ.மு.க ப.ஜ.க கூட்டணி ஏற்படுத்தும் பாதிப்பு அ.தி.மு.க விற்கு பேரு பாதிப்பு ஏற்படுத்தும் என்பது உறுதியான ஒன்று.தென் மாவட்டங்களில் அ.தி.மு.க நிலை நாட்ட வாய்ப்பு உள்ளது.அதற்கும் தே.மு.தி.க வின் வாக்கு வங்கியால் கணிசமான தொகுதி கைமாற வாய்ப்பு உள்ளது.எப்படியானாலும் இந்த கூட்டணி குறைந்த பட்சம் 4 தொகுதியாவது கைப்பற்றும் வைப்பு உள்ளது.இது அ.தி.மு.க வின் நாற்பதும் நமதே என்ற எண்ணம் நிறைவேற வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

மில்லியன் டாலர் கேள்விகள்:

எப்படியானாலும் 30 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றுவது என்பது அ.தி.மு.க விற்கு கடினமான ஒன்றுதான்.அப்படி ஒரு வேளை 40 தொகுதிகளை கைப்பற்றினாலு மத்தியில் ஆட்சி அமைக்க முடியுமா? 272 தேவை என தேசிய கட்சிகள் போராடும் போது 40 ஐ லொண்டு ஆட்சி அமைக்க முடியுமா?ஜே ஆட்சி அமைக்க மற்ற மாநில கட்சிகள் ஆதரவு அளிக்குமா?மம்தா,மாயாவதி,முலாயம் சிங்,நிதிஷ் குமார்என பிரதமர் ஆகும் கனவோடு நிறைய பேர் உள்ளனர்.அப்படியிருக்க இவர்கள் ஜே க்கு விட்டுகொடுக்க வாய்ப்பு உள்ளாதா?அப்படி ஆதரவு கொடுத்தாலும் அவரால் ஒரு நிலையான ஆட்சியை வழங்க முடியுமா?ஆதரவு அளிக்கும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அ.தி.மு.க ,ச.ம.க,இ.கு.க போன்று எதற்கெடுத்தாலும் அம்மா கோசம் போடுவார்களா?அவ்வாறாக அம்மா கோசம் போட்டால் தான் பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்படுவர்.இதனை மற்ற கட்சிகள் ஏற்றுகொள்ளுமா?மாதம் ஒரு முறை வரும் அமாவாசைக்கு அமைச்சரவை மாற்றம் ஏற்றுகொள்வார்களா?அங்கு விஜயகாந்தை திட்டி பேசினால் அமைச்சரவை யல் இடம் இதை தான் ஏற்றுகொள்வார்களா?

இவற்றிற்கு எல்லாம் பதில் அளித்துதுவிட்டு மத்தியில் ஆட்சிபற்றி அ.தி.மு.க யோசித்தால் நல்லது.பின் இந்த கோரிக்கை பற்றி மக்கள் யோசித்து முடிவு அளிப்பார்கள்,என்ற நம்பிக்கையுடன் நல்ல வேட்பாளரை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் மத்தியில் ஸ்திரமான ஆட்சிக்கு வழிவகை செய்யுமாறும் மக்களுக்கு கோரிக்கை வைத்து இக்கட்டுரையை முடிக்கிறேன்.

மு.சரவணகுமார்

Advertisements

One thought on “தமிழ் பிரதமர்

 1. வணக்கம்
  அரசியல் கள நிலை நிகழ் தகவு போல…பொறுமையுடன் இருக்கலாம்…..
  சிறப்பாக எழுதியள்ளிர்கள்.. வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s