வெற்றியாளன்

எண்ண ஓட்டத்தை
பின்னோட்டமாக செலுத்தாமல்
முன்னோட்டமாக செலுத்தினால்
உனக்கு நடக்க இருக்கும் எதிர்செயல் கூட
உனக்கான செயலாக மாறும்!

உன்னுடன் இருக்கும் உன் உள்ளம்
உனக்காக அன்றி வேறொருவருக்கும் இல்லை
உன்னுள் உருவாகும் எண்ணம்
உனக்காக அன்றி வேறொருவருக்கும் இல்லை
உருவாக்கு உன்னத உள்ளம் உனக்காக !

உள்ளத்தை செலுத்து நேர் வழியில்
நீ செல் உன் வழியில்
உன் வழி உன்னதமானால்
உலகம் நோக்கும் உன் வழி!

உலகை நோக்கு உன் பார்வையில்
இலக்கை நோக்கு உன் உன்னதமான வழியில்
இலக்கு எட்டும் உன்னை அதன் வழியில்
உலகு நோக்கும் உன்னை மனிதனாக அல்ல
உன்னதமானவனாக !

வெற்றி தரும் மகிழ்ச்சியை தவிர்
தோல்வி தரும் பாடத்தை உணர்
உன் வெற்றிக்காக உலகம் ஏங்கினாள்
உன் தோல்வி கூட வெற்றிதான்
உன் தோல்வி தரும் உத்வேகம்
உன்னை ஒரு நாள் உருவாக்கும் -மிகச்சிறந்த
வெற்றியாளனாக!

கடவுள் எழுதிய சிறந்த புத்தகம் தோல்வி
அதன் கடைசி பக்கம் வெற்றி
துவக்கத்தை முடிப்போம் வெற்றியாக
பின்னர் வரும் வெற்றி தானாக!

வெற்றிக்காக போராடுபவனை விட
தோல்வியை கண்டு துவலாதவனே
உண்மையான வெற்றியாளன்!

உலகில் சாதிக்க பிறந்தவனை
உலகம் சோதிக்கும் உன்னை உரியவனா என்று
உன்னை நீ நிருபி
உலகம் அங்கீகரிக்கும் உன்னை
வெற்றியாளனாக!

மு.சரவணகுமார்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s