காற்று வெளியிடை

kaatru_10154

“எஸ்.ஐ சார் உங்களுக்கு சி.பி.ஐல இருந்து போன் வந்திருக்கு” என 415

கத்தியதும் தூங்கி வழிந்துகொண்டிருந்த சின்னவேடம்பட்டி போலிஸ் நிலையம்
திடீரென பரபரப்பானது.

“சிபிஐல இருந்து போனா?எனக்கா? இன்னிக்கு என்ன ஏப்ரல் ஒண்ணு கூட இல்லையே?”
என அதிர்ச்சி விலகாமல் போனை வாங்கினார் எஸ்.ஐ சண்முகம்

மறுமுனையில் பேசிய ஆங்கிலமும் அவருக்கு புரியவில்லை, இந்தியும் புரியவில்லை.

” இங்கிலீசை கூட இந்தி மாதிரியே பேசறானுங்க” என ஏட்டிடம் அலுத்து
கொண்டார். “ஐ டோன்ட் அன்டர்ஸ்டாண்டு யுவர் இந்தி அன்டு இங்கிலீச். எனி
தமிழியன்ஸ் இன் சிபிஐ ப்ளீஸ்?”

இந்திகாரர் ஒருவர் தமிழில் பேச ஆரம்பித்தார்.

“நான் சிபிஐ சீஃப் டைரக்டர் பேசுது. உங்க ஊருக்கு ஒரு இன்டெர்நேஷனல்
மாபியா லீடர் தவுசன்ட் க்ரோர் டைமண்ட்சோட வந்து ஒளிஞிருக்கு என கன்பர்ம்
நியூஸ் வந்திருக்கு”

“இதுக்கு இந்தியே பரவாயில்லை” என்றார் சண்முகம். “பூசாரிபாளையத்துல
இன்டெர்நேஷனல் மாபியா லீடரா?இந்த ஊருக்கு எவன் வரபோறான்?அதுவும் ஆயிரம்
கோடி வைரத்தோட?”

” இந்த ஊருக்கு வரமாட்டான்னு சொல்லுதுல்ல? அதனால் தான் யாரும் தேடாத
ஊருக்கு வந்து ஒளிஞிசிருக்கு” என்றார் சிபிஐ டைரக்டர். “அவன் போட்டோ, ஐடி
எதுவும் இல்லை. ஆனால் அவன் ஜப்பான்காரன். பேரு எழுதிக்குது. யமகுச்சி
யமசோவா. வயசு 40. பூசாரிபாளையத்துல வேற ஜப்பான்காரங்க யாரச்சும்
இருக்குது?”

“என்ன குச்சி?” என கேட்டு பேரை எழுதிகொண்டார் சண்முகம். “என்னது
பூசாரிபாளையத்துல ஜப்பான் காரனா? இங்க பேக்கரில ஜப்பான் கேக்கு மட்டும்
தான் இருக்கு. மத்தபடி ஜப்பான்காரன் இங்கே யாருமில்லை. வந்திருந்தா அவனை
சுத்தி ஊரே கூடி நின்னுகிட்டிருந்திருக்கும். இங்க ஜப்பான்காரன்
வந்தான்னு உங்களுக்கு யார் சொன்னது?”

” கொஸ்சன்ஸ் நான் கேக்குது. நீ ஆன்சர் பண்ணுது” என்றார் டைரக்டர்.” சிபிஐ
அங்கே வந்தால் அவன் அலர்ட் ஆயிடுவான். இது முழுக்க லோகல் ஆபரேஷனா
இருக்கணும். ஸ்டேஷன்ல எத்தனை கான்ஸ்டபிள் இருக்கு?”

“நாலு கான்ஸ்டபிள், நானு, ஒரு ரைட்டர். இன்ஸ்பெகடர் பொண்ணு கல்யாணம்.
லீவுல போயிட்டார்”

“பி கேர்புல். அவன் கைல ராக்கெட் லாஞ்சர், டைனமைட், ஏகே 47 எல்லாம்
வெச்சிருக்கான். ஸ்டேஷன்ல எத்தனை வெபன்ஸ் இருக்கு?”

“என்னது ஏகே 47ஆ?” என அலறினார் சண்முகம்.”இங்கே நாலோ, அஞ்சோ டுப்பாக்கி
தான் இருக்கு. அப்புறம் லத்தி, விலங்கு, அவ்ளோதான். நீங்க உடனடியா
கமாண்டோ போர்சை அனுப்பி வையுங்க”

” கமாண்டோ வந்தால் அவன் அலர்ட் ஆயிடும். புல்லா லோக்கல் ஆப்ரேஷன் தான்.
இன்னும் 24 அவர்ஸ்ல அவனை பிடிச்சு ஜெயில்ல வெச்சிருக்கணும்.ஷூட் அட் சைட்
கூட செய்யலாம். அவன் ரொம்ப டேஞ்சரஸ். இதுவரை 40 கமாண்டோ போர்சை யமகுச்சி
கொன்னிருக்கு. யு ஹேவ் லைசன்ஸ் டு கில்” என சொல்லி போனை வைத்தார்
டைரக்டர்.

” லைசென்ஸ் டு கில்லா, லைசென்ஸ் டு டையா? அடேய் சிபிஐ டைரக்டா,
கொலைபாதகா” என சொல்லி மயங்கி விழுந்தார் எஸ்.ஐ

—-

திரு, திருவென விழித்து கொண்டிருந்தான் முத்து.

எத்தனை கூட்டம் இருந்தாலும் அவன் தான் காஸ் வெடிகுன்டு வெடித்தான் என
எப்படியோ கன்டுபிடித்து விடுகிறார்கள் என அவனுக்கு ஒரு சந்தேகம்.

இப்போது பெண் பார்க்க பெண் வீட்டில் உட்கார்ந்திருந்தான். சுற்றிலும்
கூட்டமான கூட்டம். இத்தனை கூட்டத்தில் நாம் தான் விட்டோம் என யாருக்கு
தெரியும் என்ற நம்பிக்கையில் சத்தம் வராமல் மெதுவாக விட்டான்.

அடுத்தவினாடி ஒட்டுமொத்த கூட்டமும் அமைதி ஆனது. சள,சள என பேசிகொண்டிருந்த
கிழவிகள் கூட அமைதி ஆனார்கள். அனைவரது கையும் மூக்கை நோக்கி சென்றது.
முத்துவும் மூக்கை மூடிகொண்டான். எல்லாரும் யார் இந்த படுபாதக செயலை
செய்தது என ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கையில் முத்துவும் தேடுவது போல்
நடித்தான்.

‘நீங்களா மாமா?” என அவன் அத்தைமகன் சுப்பு சத்தமாக முத்துவை பார்த்து கேட்டான்.

‘நானா? அடி செருப்பால” என முத்து அவனை மிரட்டினான்.

“பொய் சொல்லாதீங்க மாமா. உங்களுக்கு கல்ல கொட்ட தின்னா நாள் முழுக்க
விட்டுகிட்டே இருப்பீங்க தானே? இன்னிக்கு கல்ல கொட்ட தீன்னீங்களா?”

‘நான் எங்கடா கல்ல கொட்ட தின்னேன்? இதா நம்ம மாரியப்பன் தான் தின்னான்.
ஏன்டா மாரி?”

தம்பிக்கு கல்யானம் ஆகவேன்டும் என்பதற்காக அவன் பெரியப்பன் மகன்
மாரியப்பன் “ஆம்” என தலையசைத்து அந்த பழியை தான் ஏற்றுகொன்டான்.

“பொண்ணு உங்க கிட்ட தனியா பேசணும்ங்குது” என பெண்ணின் அப்பா சொன்னார்.

முத்து மெதுவாக எழுந்தான். வயிற்றில் காற்று முட்டி நின்றது. தயங்கி,
தயங்கி அறைக்குள் நுழைந்தான்.

அவள் அழகு என்றால் அப்படி ஒரு அழகு. ஆனால் இந்த நேரம் பார்த்து காற்று
வெளியே வந்துவிடும் போல் இருக்கே? வாயு பகவானே, ஆஞ்சநேயா, ஒரு தரம்
காப்பாத்தி விடுப்பா, உனக்கு வடைமாலை போடரேன்” முத்து வாயுபுத்திரனை
வேன்டிகொன்டான்.

ஆஞ்சநேயர் அவனை கைவிட்டுவிட்டார். அடுத்த வினாடி டமால் என சத்தம்
கேட்டது. பெண் மயங்கி விழுந்தாள். “என்ன ஆச்சு” என அனைவரும் உள்ளே ஓடிவர
அவமானம் தாங்க முடியாத முத்து பின்வாசல் வழியாக வெளியே ஓடினான்.

வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடிய முத்து கார்த்திகேயா மில் வாசலுக்கு வந்து
சேர்ந்தான். அது பல வருடமாக பூட்டிகிடக்கும் மில். மில் மொட்டைமாடியில்
ஏறி குதித்து தற்கொலை செய்துகொள்லலாம் என முடிவெடுத்து மெலே ஏறினான்.
மில் மேலே உள்ல தண்ணிதொட்டி மேலே நின்றான்.

கீழே பார்த்ததும் குதிக்கும் எண்ணம் போய்விட்டது. பயம் வந்துவிட்டது.

திடீரென கால் நழுவியது. தண்ணிதொட்டி மேல் இருந்த இரும்பு மூடி
துருபிடித்து கிடந்தது. ஆள் ஏறியதும் அது விலகி வாட்டர் டேங்குக்குள்
விழுந்தான். விழுந்து கால் எதிலோ சிக்கியது. கொஞ்ச நேரம் அந்தரத்தில்
தொங்கினான். காலில் சிக்கியிருந்த நூல் ஏணி அறுந்தது கீழே விழுந்தான்.

12 அடி ஆழமான தொட்டி. காயத்துடன் எழுந்து பார்த்தால் தொட்டிக்குள் ஒரு
ஜப்பான்காரன் இருந்தான்.

யமகுச்சி பெயருக்கேற்ப குச்சி மாதிரி ஒல்லி. நூல் ஏணி ஒன்றை கட்டி வைத்து
தொட்டிக்குள் ஒளிந்திருந்தான்.ஏணி முத்துவின் காலில் சிக்கி அவனுடன் கீழே
விழுந்து கிழிந்துவிட்டது.ஏகே 47 எல்லாம் மில்லுக்குள் வைத்துவிட்டு
தொட்டிக்குள் டைமன்டை வைக்கலாமா என இறங்கி தேடிகொண்டிருக்கையில் முத்து
உள்ளே விழுந்து இருவரும் உள்லே மாட்டிகொண்டார்கள்.

“யாரு நீ” என முத்து கேட்டான்.

அவன் ஆங்கிலத்தில் சொன்ன பதில் முத்துவுக்கு புரியவில்லை.

இருவரும் சேர்ந்து மேலே ஏறலாம் என முயன்றார்கள். ஆனால் வாயுபகவான்
முத்துவை மீன்டும் சோதித்தார்.

யமகுச்சி அப்படி ஒரு அதிர்ச்சியை அவன் வாழ்நாளில் சந்தித்தது இல்லை.
தொட்டி என்பதால் காற்று உள்ளேயே ரொம்ப நேரம் இருந்து சோதித்தது. மூக்கை
பிடித்துகொன்டான் யமகுச்சி.

அப்புறம் கொஞ்சநேரம் இருவரும் பேசவில்லை.

யமகுச்சியிடம் ஒரு பை நிறைய நிலகடலை இருந்தது. அதில் கொஞ்சத்தை எடுத்து
முத்துவிடம் நீட்டினான். அதன் பின்விளைவுகள் அறியாமல்…

அதன்பின் சரம், சரமாக வெடிகள் வெடிக்க யமகுச்சி அதிர்ச்சியில் மயங்கி
விழுந்தான். கடைசியில் வேறு வழியின்றி ஐபோனை எடுத்தான். கூகிளில் தேடி
ஸ்டேஷன் போன் நம்பரை பிடித்தான்

“பூசாரிபாளையம் எஸ்.ஐ ஸ்பீக்கிங்” என்றார் சண்முகம்.

‘நான் இன்டெர்நேஷனல் மாபியா லீடர் யமகுச்சி. ப்ளீஸ் கம் டு கார்த்திகேயே
மில் வாடர் டேங். இன்னும் 10 நிமிஷத்தில் நீங்க வரலைன்னா நான் முச்சு
முட்டி செத்துடுவேன்”

“ஜீபை எடுத்துகிட்டு கான்ஸ்டபிள் வடை வாங்க போயிருக்கார். இன்னும்
அரைமணிநேரத்தில் வந்துடுவார். அவர் வந்ததும் உடனே வந்து அரஸ்ட்
பண்ணிடறேன்” என்ரார் சண்முகம்.

‘அரைமணிநேரம் பொறுக்க முடியாது. எதாவது ஆட்டோ இருந்தா பிடிச்சுகிட்டு
வாங்க. இன்னும் 10 நிமிசத்துக்கு மேல் வந்தால் என் பிணத்தை தான் பார்க்க
முடியும்” என அழுதான் யமகுச்சி

யமகுச்சியை பிடித்ததும் எஸ்.ஐ சண்முகம் இந்தியா முழுக்க பிரபலம்
ஆகிவிட்டார். யமகுச்சியிடம் இருந்த வைரத்தில் 10% முத்துவுக்கு ரிவார்ட்
பணமாக வழங்கபடட்து.

எஸ்.ஐ தாலி எடுத்து கொடுக்க அந்த பெண்ணை மகிழ்ச்சியுடன் கல்யாணம்
செய்துகொண்டான் முத்து.

ஆஞ்சநேயருக்கு சொன்னமாதிரி வடைமாலையும் போட்டுவிட்டான்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s