தென்மலை திருஅந்தாதி


நன்மை யளித்திடும் தேவா
நமட்சிவா என்றால் வாவா
பொன்மேனி கொண்ட உம்மை
போற்றுவேன் எந்த நாளும்
இன்மையில் இருந்து நீங்கி
வன்மையில் சிறந்து ஓங்க
தென்மலை கொண்ட தெய்வம்
திருவருள் செய்ய வேண்டும்

வேண்டிய எல்லாம் தருவான்
வேதமாய் வாழும் தேவன்
ஆண்டியாய் நின்ற கந்தன்
அனுதினம் போற்றும் ஈசன்
ஆண்டவன் ஆகி உலகை
ஆண்டுகொன் டிருக்கின்றனாம்
ஆண்டுகள் நூறு வாழ
அவனடி போற்றி பாராய்

பாராயோ பரமன் முகத்தை
பாசமிகு பரம்பொருள் பதத்தை
சீராரும் செல்வா தலமாம்
சிறப்பு மிகு தென்மலை நகரம்
ஊரிலே வாழும் தேவன்
உமையொரு பாகன் ஈசன்
நீர் நிறை நெற்றி யானை
நிதமும் தமிழால் தொழுவேன்

தொளுவதற்குரியா தலைவன்
தொன்மையில் அவனே முதியன்
பளுவென திரண்ட வினையால்
பக்தர்கள் பதறும் பொது
கழுவுவான் கவலை தீர்ப்பான்
கருனைமாக் கடலாய் நிற்பான்
எழுதுவேன் என்றும் அவனை
எண்ணுவேன் எலெல் பிறப்பும்

பிறப்பொன்றும் இல்லாதவனை
பித்தனை பிறை சூடியை
பொறுப்புடன் எல்லா நாளும்
போற்றுதல் கடமை என்பேன்
சிறப்பு மிகு திரிபுரனாதன்
சிந்தையில் வாழும் பொது
இறப்பிலா இன்ப வாழ்வை
இறுதிவரை எய்து வோமே

பா. ஹரிஹரசெல்வம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s