சபரிமலை ஐயப்பனுக்கு மாலை

இந்த கார்த்திக மாதம் வந்துவிட்டாலே இவர்களின் பக்தி அளவிற்கு அதிகமாகவே ஆகிவிடுகிறது. ஒரு விடையம் என்னவெனில், இந்த மாதம் மாலை போட்டுவிட்டவர்கள் அநியாயத்திற்கு உண்மை பேசுவார்கள். அவர்களின் செயல்பாடுகளின் இந்த முன்னேற்றம் அல்லது அபரிவிதமான நியாயம் எல்லாம் இந்த ஒரு மாதத்திற்குத்தான். ஆட்டோ ஓட்டுகிறவன் கூட பல நேரங்களில் நியாயமாக நடந்துகொள்வதை நானே பார்த்திருக்கிறேன். கடிகாரக்கடைக்காரன் உட்பட இன்னும் எவ்வளவு எவ்வளவோ பேர். இந்த மாலை போடும் அல்லது விருதம் இருக்கும் கால அளவை கொஞ்சம் நீட்டித்தால் கூட நல்லதென தோன்றும் அளவிற்கு அவர்கள் நடந்துகொள்வார்கள்.

கோவில்பட்டியில் இருந்த முனியாண்டிக்கு நான்கு மகன்கள். நல்ல விவசாயக்
குடும்பம். வீட்டில் ‘கவுச்சிக்கு’ குறையே இருக்காது. நான்கு மகன்கள்,
ஆறு மகள்கள், அவர்களின் பிள்ளைகள் என வீடே திருவிழாக் கூட்டம்போல
இருக்கும். முனியாண்டி மட்டுமல்ல, அவரது மகன்கள், மாமன் மச்சான்கள் என
அத்தனை பேரும் குடிப் பழக்கத்துக்கு அடிமைகளாகியிருந்தனர். தினமும்
சண்டைச் சச்சரவுகள் எனப் போர்க்களம் போலிருந்தது வீடு.

குடியை மறக்க அவர் மகன்களுக்குப் பல லேகியம் கொடுத்துப் பார்த்தார்.
மந்திரிக்க பல தர்காக்களுக்கும் அழைத்துப் போய்ப் பார்த்தார். கடைசியில்
ஒருநாள் அவர் எடுத்த ஒரு முடிவு அவரது குடும்பத்தில் சந்தோஷத்தைக்
கொண்டுவந்தது. தீவிர அம்மன் பக்தரும் சாமியாடியுமான முனியாண்டி தனது
மகன்கள், மனைவி, பேரன்களோடு சேர்ந்து சபரிமலை ஐயப்பனுக்கு மாலை
போடுவதெனத் தீர்மானித்தார். சபரிமலை, அடர்ந்த வனங்களுக்கு மேலே அமைந்திருக்கிற இடம். நிஜமாகவே துடியான சாமி அது. ஒரு மண்டல விரதத்தில் ஒரு நாள் தவறினாலும் ஒன்று, போகிற வழியில் காட்டுக்குள் யானை அடித்துச்சாக வேண்டும் அல்லது புலி அடித்துச் சாக வேண்டும் என்று ஒரு நம்பிக்கை.

அதனாலேயே குடும்பத்தோடு மாலை போடுவதெனத் தீர்மானித்தார் முனியாண்டி. அதற்கப்புறமும் அவர் வீட்டில் குடி இல்லாமலில்லை. ஆனால், கலகம் இல்லை என்பதிலும், ஒவ்வொரு வருடமும் 48 நாட்கள் அவரது குடும்பம் குடியில்லாமல் இருந்தது என்பதிலும் அவருக்குச் சந்தோஷமே. சில வருடங்களில் அவரே குருசாமியாகவும் மதிப்புமிக்க மனிதராகவும் மாறி, தரகு வியாபாரத்தில்
கொடிகட்டிப் பறந்தது தனிக் கதை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s