2014 ஆம் ஆண்டு நினைவலைகள் !

நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல் பரபரப்புடன் தொடங்கியது 2014. அகில பாரதமெங்கும் மோடி அலை வீசினாலும் தமிழ் திருநாட்டில் என்னைக்குமே லேடி அல்லது டாடி மட்டும் தான் என்பதை தேசிய கட்சிகள் உணர்ந்திருந்தமையால் கூட்டணி குழம்பு வைக்க பேரு முயற்சி எடுத்தனர். தமிழருவி மணியன் முயற்சியால் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கலக்கம் மற்றும் பிற கட்சிகள் கூட்டணி அமைத்தன. மெல்ல மெல்ல பாட்டாளி மக்கள் கட்சியும் இதர சிறிய கட்சிகளும் இணைந்த பின் பெரும் குழப்பங்களுக்கு பிறகு தேசிய முற்போக்கு திராவிட கலக்கம் பா ஜா க வுடன் கூட்டணி அமைத்தது. வடிவேலுவையும் தன கட்சி அதிருப்தி MLA களையும் மன்னித்த விஜயகாந்தின் பெருந்தன்மையை வைகோ சிலாகித்து பேச, வைகோ அவர்களோடு நான் மேடையில் இருப்பதே பெரும் பாக்கியம் அவருக்காக பிரசாரம் செய்கிறேன். இதைவிட எனக்கு என்ன பாக்கியம் இருக்க போகிறது என விஜயகாந்தும் உணர்ச்சிவச பட பிஜேபி கூடம் கலை கட்டியது. ஆனால் இந்த பிரசாரம் எல்லாம் வாக்குளை அறுவடை செய்யவில்ல என்பது எல்லாருக்கும் வருத்தமே.

அகில இந்திய அளவில் பிஜேபி பெரும் வெற்றியை அடைந்தது. காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. 27 உறுப்பினர்களைக்கொண்டு அதிமுக நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருபெற்றது. தமிழகத்திலும் பிஜேபி ஒரு தொகுதியை பெற்றது. கூட்டணி கட்சிகளுக்கு வேலை செய்யாத டாக்டர் ராமதாஸ் தன் மகனுக்காக தருமபுரியில் மட்டும் பிரசாரம் செய்து வெற்றிபெற வைத்தார்.

பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வரானார்

நாடாளுமன்றத்தேர்தல் தேசிய அரசியலில் சூராவளியை ஏற்படுத்தியது போல் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு தமிழகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா வின் பதவியைப் பறித்து 4 ஆண்டு கால சிறை தண்டனையும் 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டார். விசுவாசத்துக்கு பெயர் பெற்ற பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வரானார். ஜெயலலிதா கைதானதை தொடர்ந்து தமிழகத்தில் வழிபாடுகளும் போராட்டங்களும் பெருகியது. இவை எல்லாம் உண்மைதானா நாடகம்மா என பொது மக்கள் குழம்பினர்.

விருது

அமைதிக்கான நோபல் பரிசு பாகிஸ்தானியருக்கும் இந்தியருக்கும் கிடைத்தது. வாஜ்பாய் மற்றும் மதன்மோகன் மாலவ்யவிற்கு பரத ரத்னா விருது கிடைத்தது.

காணாமல் போன விமானங்கள்:

இந்த ஆண்டில் மட்டும் 3 விமானங்கள் வலி மாரிஸ் சென்று விட்டன. அவற்றுள் முதலாவதாக சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் இன்னுமும் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை.

மொத்த வித்தையும் பெட்டர்மாசும்

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு சூபர்ஸ்டார் படங்கள் இரண்டு வெளியாகின. கொச்சடையான் பாடல்கள் சிறப்பாக இருந்தும் பொம்மை படம் போல இருக்கு நு நேகடிவ விமர்சனங்களால் சற்று தடுமாறியது. ஆறு மாதங்களில் அவசர அவசர மாக எடுக்கப்பட்ட லிங்கா எதிர்பார்த்ததை விட குறைவாக ஓடிக்கொண்டிருக்கிறது.
images?q=tbn:ANd9GcT3kHMa0Xd-Eka-YVpoCiOZEKwSr8ZG7r8pVk68Eqjy45bCOBWq

லிங்குசாமி இயக்கிய அஞ்சான் இணையப்போரளிகளால் பெரிதும் விமர்சிக்கப் பட்டு சின்னாபின்னப் பட்டு போனது. லிங்குசாமிகூரிய மொத்தவித்தையும் கொட்டி டியூன் செய்யப்பட வசனம் அதிகமாக கலாய்க்கப் பட்டது. விளம்பரங்களைப் பார்த்து கத்தியை விமர்சித்த இணையப்போராளிகளுக்கு கத்தி திரைப்படத்தின் சிறந்த திரைக்கதை இயக்கத்தினாலும் இளைய தளபதி தன நடிப்பினாலும் வாய் அடைக்க வைத்தனர். பிரச்சநிகளுக்கு நடுவில் வெளிவந்த போதும் பின்னர் பெரும் வெற்றியை அடைந்தது கத்தி.

சினிமா துளிகள்

  • நீண்ட இடைவேளைக்கு பிறகு வைகைபுயல் தெனாலி ராமன் படம் மூலம் சினிமாவிற்கு வந்தார்.
  • சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் மூலம் ஹீரோ ஆனார்.
  • சங்கர் தன ஐ படத்தின் பாடல் வெளி ஈட்டு விழாவிற்கு அர்னால்டை வரவழைத்தார்.
  • உலகநாயகன் தனது 60 வது பிறந்த நாளை நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க குப்பை ஒலிக்கும் தினமாக கொண்டாடினார்.
  • இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் மரணமடந்தார்.
  • ரஜினி காந்த் அரசியலுக்கு வரபோவது இல்லை என திட்டவட்டமாக அறிவித்தார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s