ராமாயணத் தேடல் 1 – முதன்மை காவியம்

ராமாயணத் தேடல் 1

ராமாயணம் குறித்த பல்வெறு விசயங்களை அலசி ஆராயும் பொருட்டு இத்தொடர் எழுதப்பட உள்ளது. முதலில் ராமாயணம் முதன்மைக் காவியம் குறித்த ஆய்வு.
Sri__Rama_Pattabhishekam.jpg

"வந்துதித்தாய் ராமா நீ கோசலையின் திருமகனாய்

சிந்துவழிச் சிறுகாலைத் திசையெங்கும் புலர்கிறது

மந்திரங்கள் வாய்மொழிந்தே வந்தனைகள் புரிந்தவர்க்கு

எந்திரித்து எழுந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய் "

பல வைணவ வீடுகள் சுப்ரபாதத்துடன் விடிகின்றன. பத்தில் ஒரு இந்துவிற்கு ராமாயண கதாப்பாத்திரத்தின் பெயர் இருக்கிறது.

பாரத காவியங்களில் ராமாயணம் ஒரு தலையாய காவியம். ராமாயணத்தின் பிரதிபலிப்பு பல காவியங்களில் இருக்கின்றன. தமிழில் கம்ப ராமாயணம் "ரீமேக்"காக இல்லாமல் இருந்தால் அதுவே முதன்மைக் காவியமாக இருந்திருக்கும். ஐம்பெருங்காப்பியங்களில் இடம் பெறாவிட்டாலும் கம்பராமாயணம் தனக்கு என தனி மரியாதையுடன் திகழ்கிறது.

இராமாயண காலம் கிமு 200 முதல் கிபி 400 வரை என ஆராய்சியாலர்களாலும், "த்ரேதா யுகம்" என ஆன்மிகவாதிகளாலும் நம்பப்படுகிறது. காலத்தால் மட்டும் இது முதன்மைகாவியம் எனக் கூறவில்லை. இமயம் முதல் இலங்கை வரை பாரத கண்டத்தின் பல பகுதிகளையும் இணைத்த முதல் காவியம்.

பாரத மக்கள் எவ்வாறு வாழவேண்டும் என வலியுறுத்தும் நீதி நூல்களுக்கு எல்லாம் ராமனின் வாழ்க்கை வரலாறு மேற்கோளாக அமைவதால் இது நிதிநூல்களில் முதன்மைக்க் காவியம்.

"அண்ணலும் நோக்கி, அன்னையும் நோக்கி" வில்லை வளத்த காதல் கதை. லைலா- மஜ்னு, ரோமியோ-ஜூலியட், அம்பிகாவதி-அமராவதி போன்ற காதல் கதைகளுக்கு எல்லாம் முன்னோடி சீதா-ராம காதல் கதை.

சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் அதகம் உள்ளாக்கப்பட்ட முதல் பெருங்காவியம் ராமாயணம். ராம ராவண யுத்தம் சைவ -வைணவ யுத்தமாகவும், ஆரிய-திராவிட யுத்தமாகவும் சித்தரிக்கப்பட்டு அதிக விமர்சனங்களுக்கு உள்ளானது. ராம ஜென்ம பூமியில் பாபர் மசூதி இடிப்பு, ராமர் பாலத்தின்மேல் சேது சமுத்திரம் அமைக்கத் தடை என இன்றைய அரசியல் பிரச்சனைகளுக்கும் ராமாயணமே காரணகர்த்தாவாகிறது.

"மச்ச நாதா கூர்ம நாதா வராகனாதா நரசிம்மா

நச்சிவந்த வாமனனே பரசுராமா ரகுராமா

நச்சு புகழ் பலராமா திருக்கண்ணா கல்கியனே

இச்சகத்து வைகுந்தா வேங்கடவா எழுந்தருள்வாய் "

நாராயணனின் தச அவதாரங்களில் ஏழாவது அவதாரம் ராம அவதாரம். ராம அவதாரத்தின் போது அவரது முந்தைய அவதாரமான பரசுராம அவதாரமும் முற்றுப்பெறாமல் இருக்கிறர். (பரசு ராம அவதாரம் இன்னும் முடியவில்லை என்பது ஒரு நம்பிக்கை) உலகத்தில் இறைவன் மனிதனாகப் பிறந்து வாழ்ந்த வரலாறு ஒரு காவியமாக அமைந்துள்ளது எனில் அது ராமருக்கு தான்.

ராமாயணத்தை விட மகாபாரதம் மிகப்பிரமாண்டமாக எழுதப்படுவிட்டாலும் ராமாயணத்தின் கீர்த்தி அதிகரித்ததே அன்றி குறையவில்லை. மகாபாரதம் ராமாயணத்தின் இரண்டாம் பாகமாகவும் கருதப்படுகிறது.

ஒரு நூலின் விமர்சனமே ஒரு தொடர்கட்டுரையாக அமைவதும் ராமாயணத்திற்கு தான் முதலிடம் என நினைக்கிறேன்.

(இராமாயண காலம்,இடங்கள், எழுதியவர்கள், பாத்திர சிறப்புகள், சர்ச்சைகள் என பலவும் அடுத்தடுத்த கட்டுரைகளில் ……)

தொடரும்

பா ஹரிஹரசெல்வம்

Advertisements

One thought on “ராமாயணத் தேடல் 1 – முதன்மை காவியம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s