ராமாயணத் தேடல் 2 – காலம்

ராமாயணத் தேடல் 2

யுகங்கள் நான்கு வகைப்படும். அவை:

  • கிருத யுகம்
  • திரேதா யுகம்
  • துவாபர யுகம்
  • கலியுகம்

என்பனவாகும்.

yugas.jpg

இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கால அளவுகளைக் கொண்டன. இவற்றுட் சிறிய யுகமான கலியுகம் நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் (4,32,000) ஆண்டுகள் கொண்டது. துவாபர யுகம் கலியுகத்திலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டது. இது 8,64,000 ஆண்டுகளையும், கலியுகத்திலும் மூன்றுமடங்கு பெரியதான திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகளையும் கொண்டன. கிருத யுகம் மொத்தம் 17,28,000 ஆண்டுகள் கொண்டது. இது கலியுகத்தின் நான்கு மடங்கு பெரியதாகும்.

இவற்றுள் கலியுகத்தில் கல்கி அவதாரம் நிகசவிருக்கிறது, திரேதா யுகத்தில் பலராம, கிருஷ்ண அவதாரங்கள் நிகழ்ந்துள்ளன.துவாபர யுகத்தில் வாமன அவதாரம், பரசுராம அவதாரம் மற்றும் ராம அவதாரம் நிகழ்ந்தன.

கலியுகம் என்று ஆரம்பித்தது என உறுதியிட்டு கூற இயலவில்லை. கண்ணன் இறந்தநாளில் கலியுகம் துவங்கியதாக ஸ்ரீமத் மகாபாகவதம் கூறுகிறது. கி.மு. 3102 பிப்ரவரி 18 ஆம் நாள் வெள்ளிக்கிழமை கலியுகம் தோன்றியதாக கி.பி. 476இல் பிறந்த ஆரியப்பட்டர் என்கிற வானியலார் குறிப்பிடுகிறார்.கலியுகம் கி.மு. 2449 ஆம் ஆண்டில்தான் தொடங்குகிறது என்கிறார் வராகமிஹிரர் என்னும் மற்றொரு வானியலார். கலியுகத்தைக் கழித்து துவாபரயுகத்தில் 8,64,000 ஆண்டுகளையும், திரேதாயுகத்திற்கு போக குறைந்த பட்சம் 20 லட்சம் ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். ஆக இந்துக்களின் நம்பிக்கைப்படி ராமாயணம் நிகழ்ந்தது 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்.

ராமர் ஒரு ஆரியர். இந்தியாவிற்குள் ஆரியர்கள் 3500 ஆண்டுகளுக்கு முன் வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ராமாயணம் வால்மீகி முனிவரால் கிமு 200க்கும் கிபி 400 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. வால்மீகி முனிவரும் ராமாயணத்தில் ஒரு கதாப்பாத்திரம். பட்டாபிசேகம் முடிந்து ராம ராஜ்ஜியம் தொடங்கி பல ஆண்டுகளுக்கு பின் காதுக்கு செல்லும் சீத தேவிக்கு அடைக்கலம் தரும் முனிவராக வால்மீகி முனிவரே வருகிறார்.

தமிழில் கம்பராமாயணம் 12ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.இப்படி ராமாயணம் நிகழ்ந்த காலத்திருக்கும் எழுதப்பட்ட காலத்திற்கும் பல கருத்து வேறுபாடுகள் உள்ளன.

ஆனால் என்னால் சிலவற்றை மிக உருதியாக சொல்லமுடியும். அவை:

1. ராமாயணம் நிகழ்த்த காலம் தெரியாது,

2. ராமாயணத்தைக் கிண்டல் செய்து "பகுத்தறிவு" கொள்கை உடைய எம்.ஆர். ராதா இயற்றி நடித்த "கீமாயணம்" 20ம் நூற்றாண்டில் நிகழ்ந்தது.

3. நகைச்சுவையை மையப்படுத்து முற்றிலும் வேறுபட்ட "டிராமாயனா" எஸ்.வி.சேகர் இயக்கத்தில் 21ம் நூற்றாண்டில் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது.

– தொடரும்

பா ஹரிஹரசெல்வம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s