ராமாயணத் தேடல் 3 – எழுதியவர்கள்

ராமாயணத் தேடல் 3

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்….

ஒரு திருடன் ஒரு முனிவரை வழிப்பறி செய்கிறான். அந்த முனிவர் " நீ செய்யும் பாவத்திற்கு நரகத்தில் எவ்வளவு தண்டனைகள் கிடைக்கும் தெரியுமா?" என கேட்கிறார். " நான் செய்யும் பாவத்தில் என் குடும்பம் வாழ்கிறது. ஆகவே என் குடும்பத்தார் என் பாவத்திலும் அதன் தண்டனையிலும் பங்கு கொள்வர்" எனக் கூறுகிறான். "நீ உன் வீற்ற்க்குச் சென்று உன் குடும்பத்தாரிடம் கேள். அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்கிறார்கள் எனில் உனக்கு இன்னும் பல பொருல்கலைத்தருகிறேன். அதுவரை நான் இங்கேயே இருப்பேன்" என அந்த முனிவர் கூறுகிறார்.

திருடன் வீட்டிர்க்குஸ் சென்று தன மனைவி, மக்களிடம் "நான் திருடுவதால் தான் நீங்கள் எல்லோரும் வாழ்கிறீர்கள். நான் செய்யும் திருட்டு தொழிலின் பாவத்தில் யாரார் எவ்வளவு பங்கு கொல்கிறீர்கள் என வினவுகிறான். அவர்கள் அனைவரும் "நி இந்த குடும்பத் தலைவன், எந்த தோளிலாவது செய்து உன் குடும்பத்திற்கு கொடுப்பது தான் உன் கடமை, ஆகவே அந்த பாவத்தில் எங்களுக்கு எந்தவிதமான பங்கும் கிடையாது, நீ நல்ல தொழில் செய்தால் அதன் புகழும், பெருமையும் உனக்கே, நீ தீய தொழில் செய்தால் அதன் பாவமும் பழியும் உனக்கே" என்று கூறிவிடுகிறார்கள்.

paampu+putru.jpg
திருடன் மனம் வருந்துகிறான். தான் இதுவரை செய்து வந்தது பாவம் என உணருகிறான். துறவு கொள்கிறான். தன்னைக் கேள்விகேட்ட முனிவரின் ஆசிப்படி தவம் செய்கிறான். தன்மீது புற்று வளர்வது கூட உனாரத வாறு கடும் தவம் செய்கிறார். சமஸ்கிருதத்தில் புற்று என்பதை "வால்மீகி" என்பர். திருடன் வால்மீகி முனிவர் ஆகிறார். திருடனைத் திருத்திய அதே முனிவர் வால்மீகி முன்வருக்கு ராமாயணம் முழுவதையும் சொல்கிறார். ராமாயணம் அப்போது நடந்து கொண்டிருந்ததா இல்லை அதன் பிறகு தான் நடைபெற இருக்கிறதா என்பது ஆய்விகளுக்கு உட்பட்டது. வால்மீகி முனிவருக்கு ராமாயண உபதேசம் செய்தவ முனிவர் நாரத மகாமுனி.

கம்பர்
kambar.jpg

பன்னிரண்டாம் நூற்றாண்டு. தமிழகத்தில் இன்றய தஞ்சை மாவட்டத்தில் ஆதித்தன் என்பவருக்கு ஆண்குழந்தை பிறக்கிறது. அக்குழந்தை ஆதித்தனின் அன்பிலும் அப்பகுதி வள்ளல் சடகோபரின் ஆதரவிலும் வளர்கிறது. சடகோபர் உதவியால் தமிழும் சமஸ்கிருதமும் படிக்கிறார். பின் சமஸ்கிரதத்தில் தனக்கு பிடித்த ராமாயணத்தை நல்ல தமிழில் ராம அவதாரம் என இயற்றுகிறார்.

"உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்

நிலை பெருத்தலும் நீங்கலும் நீங்கலா

அலகிலா விளையாட்டுடையார் தலைவர்

அன்னவர்க்கே சரண் நாங்களே"

என தொடங்கி திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்கிறார். அவர் தான் கவிச்சக்கரவர்த்தி கம்பர். கம்பர் எழுதிய "ராம அவதாரம்" கம்பரின் திறமை, புகழ் மற்றும் ராம பிரானின் அருள் ஆகியவற்றால் "கம்பராமாயணம்" ஆகிறது.

கம்பர் காலத்தில் ஒட்டகூத்தர் எனும் புலவரும் இருந்தார். பாடல் பாடி ஒருவரின் தலையை வெட்டவும் மற்றொரு பாடல் பாடி வெட்டப்பட்ட தலையை ஒட்டவும் முடிகிற திறன் வாய்ந்த புலவர். கம்பரின் புகழ் ஒட்டகூத்தருக்கு பொறாமையை உண்டு பண்ணுகிறது. ஒருநாள் கம்பர் ராமாயணம் எழுதுவதைக் காண செல்கிறார் ஒட்டகூத்தர். அங்கு அவர் கண்ட காட்சிக்குப்பின் ஒட்டகூத்தர் கம்பர் "கட்சி"க்கு மாறிவிடுகிறார். ஏனெனில் கம்பர் கவி எழுதுவதருகு ஒளி தர காளியம்மனே விளக்கு ஏந்தி நின்றாராம்.

கம்பருக்கு ஏனோ ராமபிரானை சாதாரண மனிதனாகக் காட்ட விரும்ப வில்லை. ஆதலால் ராம பட்டாபிசேகத்துடன் தன் "ராம அவதாரம்" காப்பியத்தை ஆறு காண்டங்களில் நிறுத்திவிட்டார். கம்பர் விட்டுவைத்த ராமாயண மீதிக்கதையை உத்தரகாண்டம் என ஒட்டகூத்தர் எழுதிமுடித்தார்.

தமிழில் கம்பராமாயணம் போல இந்தியில் துளசி தாசர் "ராமச்சரிதமனஸ்" என்ற பெயரில் பக்தி உணர்வு பொங்க 15ம் நூற்றாண்டில் எழுதினார். தமிழ் கலாசார கம்ப ராமாயணமும் பக்தி உணர்வு மிக்க ராமச்சரிதமனஸ் உம் , (தென் – வாடா) இந்தியர்களால் வால்மீகி ராமயனத்திற்கு இணையாக போர்ரபடுகின்றன.

இவர்கள் தவிர

1.தெலுங்கில் ஸ்ரீ ரங்கநாத ராமாயணம் என்ற பெயரில் புத்த ரெட்டி என்பவரால்
2. கன்னடத்தில் ராமச்சந்திர சரிதா புராணம் என நாகசந்திரர் என்பவராலும்,
3.மலையாளத்தில் அத்யாத்ம ராமையன் கிளிப்பாட்டு என்ற பெயரில் துன்சத்து எழுத்தச்சன் என்பவராலும்,
4.வங்காளத்தில் வங்காள கிரித்திவாச ராமாயணம் என்ற பெயரில் கிரித்திவசர் என்பவராலும்,
5.அஸ்ஸாமில் மாதவ கந்தழி என்பவரால் அஸ்ஸாம் கத ராமாயணம் என்ற பெயரிலும்,
6. மராட்டியத்தில் ஏக்நாத் என்பவரால் மாரதி பவர்த ராமாயணம் என்ற பெயரிலும்,
7. குஜராத்தில் துளசி-கிருத ராமாயணம் என்ற பெயரில் பிரேமானந் என்பவராலும்,
8. பஞ்சாபில் குறு கோவிந்த் சிங் என்பவரால் ராம அவதாரம் என்ற பெயரிலும்

இன்னும் காஷ்மீர், உருது மற்றும் பல இந்திய மொழிகளில் 15ம் நூற்றாண்டு முதல் 17ம் நூற்றாண்டு வரை எழுதப்பட்டன.

வால்மீகி முனிவரே முதலில் எழுதினார். அவரைத்தொடர்ந்து ஒவ்வொரு மொழியிலும் ஒரு பெரும் புலவர் எழுதி உள்ளனர். இன்றும் தொடர்கதை, நாவல் வடிவில் பலர் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். ராஜாஜி சக்கரவர்த்தி திருமகன் என்ற பெயரில் எழுதினார். ஆனால் வால்மீகி முனிவருக்கே ராமாயணம் சொன்னவர் "நாரதர மகா முனிவர் " என்பதை நினைவில் கொள்வீர்.

-தொடரும்

பா ஹரிஹரசெல்வம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s