ராமாயணத் தேடல் 4 – இடங்கள்: அயோத்தி

ராமாயணத் தேடல் 4த்ரேதா யுகத்தில்…..
ரகுவம்சத்தை சேர்ந்த தசரதமாமன்னர் ஆட்சி செய்த கோசல நாட்டின் தலைநகர். பரதகண்டம் முழுவதும் புகழ்பெற்று விளங்கிய நகரம். பிள்ளை இல்லாத மன்னவர் தன குலகுரு வசிஷ்ட மகரிஷி அருளுடன் புத்திர காமேஷ்டி யாகம் செய்கிறார். பட்டத்தரசி கோசலா தேவிக்கு ஸ்ரீ ராமரும் கைகேயிக்கு பாரதாழ்வாரும், சுமுத்திரைக்கு இளையபெருமாள் லட்சுமணர் மற்றும் சத்ருக்கனர் பிறக்கின்றனர்.
rama-birth.jpg

இவர்கள் பெரியவர்கள் ஆகும் போது ராம-பாரத வாரிசுரிமைக்காக தசரதருக்கும், கைகேயிக்கும் பெரும் சண்டை நடைபெறுகிறது. ராமர் வனவாசம் செல்கிறார், மன்னர் மேலுலகம் செல்கிறார். அப்போதிலிருந்து ராமர் பட்டாபிசேகம் வரை அயோத்திமாநகர் துயரத்திலேயே வாடுகிறது.

ராமராஜ்ஜியம் தொடங்கி சிலகாலம் செழிப்புற்றிருந்த நகரம் சீதா தேவியின் வனவாசத்திற்கு பிறகு மீண்டும் சோக நகரம் ஆகிறது. பின்னர் ராமரின் வாரிசுகளே ஆண்ட போதும் பழைய தசரதர் காலத்து கீர்த்தி மீண்டும் வரவேயில்லை.

Image result for seetha at forest

துவாபரயுகத்தில் ….
துவாபரயுகத்தில் சந்திர வம்சத்தினரின் அஸ்தினாபுரம், ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்த கோகுலம், பலராம-கிருஷ்ணர்கள் ஆட்சி செய்த துவாரகை, தர்மர் ஆட்சி செய்த இந்திரபிரஸ்தம் மற்றும் வள்ளல் கர்ணன் ஆட்சி செய்த அங்க தேசம் ஆகியவை மட்டுமே பெயர் பெற்று விளங்கின. மகாபாரதத்தில் சில இடங்களில் ராமன மக்கள் பற்றி புகல்பாடினாலும் அயோத்தி யைப் பற்றி யாரும் பேசுவதில்லை.

கலியுகத்தில்….
த்ரேதாயுகத்தில் உச்சத்தில் இருந்த நகரம், துவாபரயுகத்தில் மறக்கப் பட்ட நகரம் கலியுகத்தில் பாவம் ரெம்பவே கஷ்டப்படுது….
குடியரசு இந்தியாவில் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் அயோத்தி மைந்துள்ளது.இங்கு கி பி பதினாறாம் நூற்றாண்டுவரை ராமர் கோயில் இருந்ததாக நம்பப்படுகிறது. கி பி 1528ல் முகலாய மன்னர் பாபர் இங்கு ஒரு மசூதி கட்டி வைக்கிறார். அது பாபர் மசூதி என அழைக்கப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றண்டுவரை அமைதியாக இருந்த இந்துக்கள் பின்னர் அங்கு மீண்டும் ராமர் கோயில் வர வேண்டும் என விரும்புகின்றனர். 1948ல் மசுதி போட்ட படுகிறது. 1992 டிசம்பர் 6ம் நாள் பாபர் மசூதி இடிக்கப்படுகிறது. இன்று வரை இந்திய இந்து அமைப்பகள் அங்கு கோயில் கட்டுவதையேத் தன லட்சியமாக செயல்படுகின்றன.
063009062853BABRI-DEMOLITION-PIC-D-RR.jpg

பாபர் மசூதி இடிப்பு இந்தியா முழுவதும் மதகலவரங்களுக்கு காரணமாக அமைகிறது. இது தொடர்பாக நீண்ட நாட்களாக அலகாபாத் உயர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் 2010ல் தீர்ப்பு வளங்கப்பது.

அது:
1. பாபர் மசூதி இருந்த இடமே ராமர் பிறந்த இடம்.
2. சர்ச்சைக்குரிய இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு
1. ராம் ஜென்ம பூமி இயக்கம்,
2.நிர்மோகி அகோரா,
3.சுன்னி வக்பு வாரியம்
ஆகியவர்ரிடம் ஒப்படைக்கப்படும்.
தில்லி உச்சனீதிமன்றம் இந்த தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

Image result for allahabad high court

கீர்த்தி மற்றும் அபகீர்த்தி இரண்டையும் அதிகமாகப் பெற்ற அயோத்தி மானரம் எப்போது நிம்மதியான வாழ்வுக்கான அமைதிபூங்காஆகுமோ!?.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s