ராஜ கீதமே

இருபத்தைந்து ஆண்டுகள்
தமிழ் சினிமாவை
ஒற்றை தூணாய் தாங்கிப் பிடித்தது
உன் இனிய இசையே!

கன்னடக்காரனும் ஆந்திரக்காரனும்
மலையாளிகளும் ஆட்சி புரிந்த
தமிழ் சினிமா இசையரங்கை

உன் வருகைக்குப் பின் தான்
ஒரு தமிழன் தனியே
நீ ராஜாவாய் ஆட்சி செய்தாய்
உன் கை விரலசைவுக்கு
மற்ற மாநிலத்தவரைஆட்டிவித்தாய்

சினிமாவின் தலையெழுத்து
உன் கையெழுத்தில் இருந்தது
நீ தொட்டதெல்லாம் இசை
உன் பெயர் தாங்கிய படங்கள்
வெள்ளி விழாக் கொண்டாட்டங்கள்
தயாரிப்பாளர்களுக்கு
உன் கால் சீட் கிடைத்தாலே
அலாவூதீனின் அற்புத விளக்குத் தான்

காலம் நேரம் மறந்து
ஒரு முனிவனைப் போல்
இசை சுரங்கள் தேடினாய்
உன் குடும்பத்தை மறந்து
இசை இரசிகனுக்கு
கொடுத்தாய் இன்பம்

உன் ஆர்மோனியத்துக்கு
ரஜனியும் ஒன்று தான்
ராமராஜனும் ஒன்று தான்
அதனால் தான்
இருவர் படங்களும்
வெள்ளிவிழாக் கொண்டாடியது

உன்னைத் தவிர சினிமாவில்
எல்லோரும் காக்கா பிடித்தும்
பணிந்தும் குனிந்துமே
நடித்துமே முன்ணனிக்கு வந்தனர்
உன் கோபத்திலும் நேர்மை உண்டு உன்னைத் தவிர
உயர்வானவராய் ஒழுக்கத்தில்
உதாரணதுக்கு வேறு யாருமில்லையே

உன்னைத் தவிர
மற்ற இசையமைப்பாளர்கள்
வெற்றி பெற்ற பாடலாசிரியருக்கே
பாட்டெழுத வாய்ப்புக் கொடுத்தனர்

நீ ஒருவர் மட்டுமே
ஒரு படத்தில் ஆறு பாடலெனில்
ஆறு பாடலாசியருக்கு
பாட்டுக்கு வாய்ப்புக் கொடுத்து
அவர் தட்டில்
வாய்க்குச் சோறு போட்டாய்

உன்னை எதிர்க்கும்
கங்கையமரனும்
மதன் கார்க்கியும்
நீ போட்ட பிச்சையில் வளர்ந்த
எச்சிலைகள் இவர்கள்

கங்கை அமரனுக்கு முகவரி
உன்னால் கிடைத்தது
வைரமுத்துவுக்கு முகவரி
நீ கொடுத்தது
ஏன் என்றால்
தமிழ் நாட்டில்
தண்ணீருக்கு தான் தட்டுப்பாடு
தடக்கி எவனும் வீழ்ந்தால்
தலைவனுக்கு மேலோ
கவிஞனுக்கு மேலே தான் விழவேண்டும்
நீ இல்லை என்றால்
கால ஒட்டத்தில்
இவர்களும் காணாமல் போயிருப்பார்

வாழ்க்கையில்
பலரின் காயங்களுக்கு
மருந்தானது உன் இசையே
வார்த்தைகளால்
உன்னை காயப்படுத்துதல் முறையோ

உன் உழைப்புக்கு ஏத்த
ஊதியம் உனக்கு தரப்படவில்லை
யானைப் பசிக்கு சோளம் பொரியாக
சம்பளம் வாங்கினாய்

நீ இலட்சங்களில் சம்பளம் வாங்கினாய்
இன்றைய இசையமைப்பாளர்கள்
உன் பாட்டை கொப்பி அடித்து
கோடிகளில் வாங்குகிறார்கள்
காப்புரிமைக்கும் கையெழுத்திட
கேட்கின்றார்கள்

உள்ளத்தை வருடும்
மெட்டுப் போட தெரிந்தளவுக்கு
துட்டு வாங்கத் தெரியவில்லை

திரை உலக பேரலையில்
எத்தனையோ கலைஞர்கள்
காணாமல் போனார்கள்
நீ ஒருவனே
திரை இசை உலகில்
கலங்கரை விளக்கானாய்
உன்னை மறைக்க
எந்த திரையாலும் முடியாது

நாய்கள் குரைக்க
காரணம் தேவையில்லை
தன் நிழலைப் பார்த்து
தானே குரைக்கும் என்று
ஊரில் பாட்டி சொல்லுவா
குரைக்கிற நாய்கள் குரைக்கட்டும்
இசைக்கிற உன் விரல்கள்
இசைக்கட்டும் திசை எட்டும்….

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s