மித வேகம் மிக நன்று

சாலைகளுக்குத் தெரியாது
நீ சாதிக்கப் பிறந்தவன் என்று…

விரைந்து செல்லும் வாகனங்களுக்குத் தெரியுமா…
நீ தான் எங்கள் வீட்டின்
விடியல் என்று……

முந்திச்செல்லும்
முன்னோடிகளுக்குத்
தான் தெரியுமா
நீ தான்
எங்கள் வீட்டின்
முகவரி என்று…….

கடந்து செல்லும் கனரக வாகனங்களுக்குத்
தெரியுமா..
நீ தான் எங்கள்
கண்மணி என்று…..

விடியலும்
விலாசமுமாய்
நம்பிக்கையும் எதிர்காலமுமாய்
நம்பியிருக்கிறோம்
உன்னை….

ஐந்து நிமிடங்கள்
காத்திருந்து
அடுத்து வரும்
பேருந்திற்காக காத்திருக்க
முடியாத உனக்காக
நீ பிறந்த நாள் முதல்
இன்று வரை காப்பாற்றுவாயென்று
காத்திருக்கிறோம்….

காலமெல்லாம்
உடனிருப்பேனென்று
கட்டியத்தாலி நினைவிருக்கிறதா
கண்ணாளா…
காத்திருப்பேன் கடைசிவரை…..

விரல் பிடித்து
நான் நடந்து
கரை தாண்டவும்,
கடல் தாண்டவும் கற்றுக்கொண்ட
உன் நிழல் நான்
என் தந்தையே
நான் விழித்திருப்பேன்
நீ வரும் வரை…..

அலுவலகத்திற்குத் தானே
சென்றிருக்கிறாய்
அப்படியே திரும்பி வருவாயென்று
காத்திருக்கிறோம்….

உடையாமலும்
உரசாமலும்
கவனமுடன்
திரும்பி வா..
நீ செல்லும் பாதைகள்
உனக்கு வெறும்
பயணமாக இருக்கலாம்
காத்திருக்கும் எங்களுக்குத்தான்
தெரியுமா? காலனிடம்
நீ போராடிக் கொண்டிருக்கிறாய்
என்று….

அம்மாவும்,
அப்பாவும்
தம்பியும்,
தங்கையும்
மனைவியும்,
மகளும்
மகனுமென வாழக்கிடைத்த
இந்த வாழ்க்கையொரு
வரமென்று
உணர்ந்து கொள்ளுங்கள்….

தொங்கிச் செல்வதும்
துரத்திச் செல்வதும்
உங்கள் குருதியின்
வேகமாக இருக்கலாம்
ஆனால்,
மரணத்திடம் சிக்கினால் மணித்துளி அளவு கூட தப்ப முடியாது….

விவேகமுடன் செயல்படாவிட்டால்
வீட்டில் காத்திருக்கும்
உயிருக்கும் மேலான
உறவுகளையெல்லாம்
மருத்துவமனையில்
காத்திருந்து அழ வைத்துவிடும் என்பதை அறிவீர்களோ……..

அதனால் தயவு செய்து வாகனத்தில் செல்லும் போது மெதுவாக செல்லவும்…..

நீங்கள் வீட்டுக்கு
ஒரே ஒரு மகனாக,
மகளாக இருந்தால்
ஓரு குடும்பத்தின்
வாரிசு போய்விடும்….!
கணவனாக இருந்தால் குடும்பம் போச்சு…!
மனைவியாக இருந்தால்
குழந்தைகளுக்கு
தாய் இல்லை…!
தந்தையாக இருந்தால் ஒரு குடும்பமே
இருண்டு போய்விடும்…

கண நேர
கவனகுறைவால்
கதை முடிகிறது நண்பா!
கவனமாக செல் !
காத்திருக்கு
உறவுகள் பல
உனக்காக….!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s