ஸ்ரீ வேங்கடேச மங்களாசாஸனம்

திருக்கேள்வா மங்களங்கள் பொழிபவனே பொலிபவனே
பெரு நெறியே சீனிவாசா வேங்கடவா மங்களங்கள் [2] 1

பெருந்தவத்தாய் மைய்யலுறப் பேருலகைப் புரந்தருளும்
திருப்புருவ அருள் கண்ணா வேங்கடவா மங்களங்கள் 2

வேங்கடத்து மலைப்பொலி சேர் விழையணியாம் திருத்தாளாய்
ஓங்கிய சீர் மங்களத்தாய் வேங்கடவா மங்களங்கள் 3

எல்லோர்க்கும் எப்பொழுதும் எழில் மயக்கும் பணித்தருளும்
நல்லழகு பெருமானே வேங்கடவா மங்களங்கள் 4

அறிவறியாய் குற்றமில்லாய் மாற்றமில்லாய் நிறைமகிழ்வே
எழில் ஞான உயிர் முதலே வேங்கடவா மங்களங்கள் 5

எல்லாமும் அறிந்தவனே படைத்தவனே ஆள்பவனே
நல்குணனே எளிமையனே வேங்கடவா மங்களங்கள் 6

பரப்ரம்மா பரமாத்மா விழைந்தனர்கள் பெற அருளும்
பரம் பொருளே பரதத்வா வேங்கடவா மங்களங்கள் 7

தவமேனி தனியழகைச் சலிப்பின்றி தியானிப்போர்
தெவிட்டாது தூய்த்துணரும் வேங்கடவா மங்களங்கள் 8

சரண் புகுவார் மோட்சநிதி தனதடியை எனது வலது
கரத்தானே காட்டியருள் வேங்கடவா மங்களங்கள் 9

பெருங் கருணைப் பேரமுதப் பெயராற்றின் அலைகளெனும்
திருவிழியால் துயர் நீக்கும் வேங்கடவா மங்களங்கள் 10

திருமாலை பட்டாடை திரு அணிகள் பெருமை பெற
வரு பெறுவன் துயர் தணிக்கும் வேங்கடவா மங்களங்கள் 11

அருள் பொழிய வைகுந்தம் தவிர்ந்தருளி கோனேறி
திருக் கரையில் புணர் தாடும் வேங்கடவா மங்களங்கள் [2] 12

மணவாள மாமுனிகள் உளத்திருந்து பேருலகக்
கணம் புரந்து களித்தருளும் வேங்கடவா மங்களங்கள் 13

ஈங்கெங்கள் குருமுதலோர் இயம்பியவள் மங்களத்தாய்
ஓங்கி உயர் வேங்கடவா உனக்கென்றும் மங்களங்கள் 14

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s