ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்ரம்

மலர் மேல் உறை மாதவி மார்பகத்தே
குலவும் ஒரு குங்கும நீலவனே
மலர் தாமரை கண்ணுடை நாயகனே
நலமே பெற காத்தருள் வேங்கடவா [2] 1

மறை நான்முக ஐமுக ஆறுமுகப்
பெரியோர்களின் சீர்மிகு தலைமணியே
சரணாகதி யென்பவர்க்க ன்புறவே
பெரும்பேர் நிதி காத்தருள் வேங்கடவா 2

பொது எல்லைகள் தாண்டிய பாவமதை
நிதமே புரிந்தின்னமும் புரிவதிலே
அதிவேகமே கொண்டுள எங்களையே
இதமாகவே காத்தருள் வேங்கடவா 3

அருள் நீ வதில் ஆர்வமாய் நின்னடியார்
வரம் வேண்டியதை விட ஈபவனே
பெரும் நான்மறை ஓதிடும் ஓர் பொருளே
திருமார்பனே காத்தருள் வேங்கடவா 4

நயம் சேர் இசைக்குங் குழல் இன்னமுதால்
வயமாயிடு கோபியர் சூழ்பவனே
மயல் காமனின் பேரெழில் கோடி பெரும்
முயல்வே யெமைக் காத்தருள் வேங்கடவா 5

பலர் போற்றிடும் பேரருள் மூர்த்தியனே
நலமே புனர் சீதையின் நாயகனே
தளிர் மேனியனே ஒரு வில்லவனே
ஒளியே எமைக் காத்தருள் வேங்கடவா 6

இருதாமரை பூத்திடும் சந்திரனாய்
திரு சீதையின் கேள்வனை இன்றவனே
இருள் ராவணனுக்கொரு சூரியனே
சரணா இனும் காத்தருள் வேங்கடவா 7

நெறியாரடையின் உரை எளியவனே
திருத்தாயினை தேவியர் பெற்றவனே
பிறர் யாருடை தாளையும் வணங்கிலமே
பெரியோர் ெயமைக் காத்தருள் வேங்கடவா 8

திருவேங்கடேசா நாதனே நாதன் நீ
ஒரு வேங்கடேசா உன்னையே எண்ணினும்
பெருவேங்கடேசா நின்னையே நின்னையே
அருள் வேங்கடேசா அருள் வேங்கடவா [2] 9

நெடுநாள் வரை யாம் உனை தொழுவதற்கே
முடியாமையால் இன்றுனைத் தொழப் புரிந்தோம்
அடி போற்றிடும் நித்தியர்க்கருள்வது போல்
அடியே எமையும் காத்தருள் வேங்கடவா 10

அறியாமையால் புரி தீவினை புரியாதுளத் தர நீக்கிடு
பொறுத்தே அருள் பொறுத்தே அருள் பெருமாமணி
வேங்கடவா [2] 11

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s