அரசு வேலை ( data entry )

பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் DATA ENTRY வேலை மூலம் கணிசமாக சம்பாதிக்கலாம்.

முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிடுகிறேன்.மாதம் 25000 அல்லது 30000 சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது பொருந்தாது.படித்துக் கொண்டு ஏதேனும் பார்ட் டைமாக பகுதிநேர வேலை கிடைக்குமா என எதிர்பார்த்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கோ,அல்லது படிப்பை முடித்து நல்ல வேலைக்காக காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் அதுவரை ஒரு வேலை பார்த்தால் தேவலை என்று நினைப்பவர்களுக்குத்தான் இது பொருத்தமாக இருக்கும்.

பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு சார்ந்த பல்வேறு ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன.பல கோடிக்கணக்கான ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவது என்பது சற்று கடினமான காரியம். அதன் ஒரு பகுதியின் தொடர்ச்சியாக பொதுமக்களின் பங்களிப்பையும் அரசு வரவேற்கிறது.சில PDF பைல்களாக இருக்கும் ஆவணங்களை டைப்பிங் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதில் நாம் செய்யும் வேலைக்கு பாயிண்ட் கொடுக்கப்படுகின்றன.அந்த பாயிண்டுகளை பின்னர் தொகையாக கணக்கிட்டு மாற்றிக் கொள்ளலாம்.ஒரு சின்ன கம்ப்யுயூட்டர் அல்லது லேப்டாப் மற்றும் நெட் கனெக்ஷன் இருப்பவர்கள் இந்த வேலையை செய்யலாம்.இதனை செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் தேவை.டிஜிட்டல் இந்தியா இனையதள பக்கத்திற்கு சென்று உங்களை பற்றிய தகவல்களை பதிவு செய்துகொண்டு நீங்கள் டைப்பிங் வேலையை தொடங்கலாம்.

நீங்கள் தன்னார்வலராகவும் இந்த வேலையை செய்யலாம்.இல்லை உங்கள் பணம் வேண்டுமென்றாலும் வாங்கிக் கொள்ளலாம்.இதுவரை 339685 பேர் தங்களை இதில் இணைத்துக் கொண்டு வேலை செய்து வருகின்றனர்.

https://digitizeindia.gov.in/

என்ற இணையதளத்துக்கு சென்று REGISTER NOW என்ற பட்டனை கிளிக் செய்து உங்களை பற்றிய தகவல்கள் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்துவிட்டு உங்கள் வேலையை தொடங்கலாம்.அடிப்படை டைப்பிங் தெரிந்திருப்பவர்களுக்கு இந்த வேலை வெகு சுலபம்.டைப்பிங் தெரியாதவர்களும் செய்யலாம்.இதனை பகுதி நேரமாகவோ,முழு நேரமாகவோ செய்வது உங்களது விருப்பம்.இதில் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பது உங்களின் திறமை,வேகம்,நேரத்தை பொறுத்தது.

மேலதிக விபரங்களுக்கு:
https://digitizeindia.gov.in

Courtesy – Ramesh Honey Kumar

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s