தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து

வரலாறு நெடுகிலும் நம் தமிழ்த் தாய் ஆபத்துகள் சூழவே வாழ்ந்து வருகிறாள். ஆனால் இப்போது எதிர்பாராத வகையில் தமிழுக்கு ஒரு புதிய ஆபத்து வந்துள்ளது. பெருந்திரளான தமிழ் மக்கள் இந்த ஆபத்தை உணரவில்லை என்பதால் இந்தப் புதிய ஆபத்து இன்னுங்கூட பெரிய ஆபத்தாகி விட்டது. சமற்கிருத, ஆங்கில, இந்தித் திணிப்புகளாலும், கலப்புகளாலும் தொடர்ந்து அடுத்தடுத்து வந்துள்ள தாக்குதல்களுக்கு முகங் கொடுத்துச் சில பல இழப்புகளுக்கும், சிதைப்புகளுக்கும் உள்ளான போதிலும் சீரிளமைத் திறங்குன்றாச் சிறப்பை அறவே இழந்து விடவில்லை…

Rate this:

ஒருங்கிணைந்த இந்து மதம்

இந்துக்கள் அதிகமாக வாழும் இந்தியாவில் தொன்மையான முதல் மதம் இந்து மதம் என்று அனைவரும் நினைக்கின்றோம். ஆனால் புத்த, சமண சமயங்களுக்கு பின்னர் தான் இந்து மதம் இங்கு உருவானது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?. உண்மையில் அரேபிய படையெடுப்புகளுக்கு பின்னர் தான் இங்கு இந்து மதம் உருவானது. உண்மையில் இந்து என்ற சொல்லே முகமதியர்களாகிய அரேபியர்களால் தான் வழங்கப்பட்டது! இந்திய வரலாற்றில் நாம் அறிந்துள்ளவரை ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நகரங்களடங்கிய சிந்து சமவெளி நாகரிகமே தொன்மையானதாகக்…

Rate this:

என்று விடியும் ஒலிம்பிக் கனவு ?

ஒலிம்பிக் துவக்கப்பட்ட காலத்தில் இருந்தே இந்திய மக்களின் கோப்பை கனவை இந்திய வீரர்கள் நிறைவு செய்வதே இல்லை.120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டு மக்களின் பிரதிநிதியாக செல்லும் விளையாட்டு வீரர்கள் தங்கம் வெல்ல வைப்பு இல்லாமல் போய்விடுகிறது.இவர்க பதக்கம் வெல்லாமல் இருக்க காரணம் வீரர்கள் மட்டுமல்ல,அவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படுவதில்லை என்பது தான் உண்மை.அரசியல் தலையீடு அதிகம் இருப்பது,,வீரர்கள் தேர்வில் அரசியல்வாதிகள் தையிடுவதன் மூலம் தகுதியான வீரர்கள் தேர்வு நடைபெறுவதில்லை.தங்கம் அல்லும் நாடுகளான ஜப்பான்,சீனா,அமெரிக்கா,ரஷ்யா…

Rate this:

நாசமா போகுது தேசியத்தொழில்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார் என்று சொன்ன பொய்யாமொழிப் புலவரின் வாக்கு இன்று பொய்யாகிப் போனது. விவசாயிகள் மட்டுமே மற்ற தொழில் செய்வோரிடம் கையேந்தி நிற்கின்றனர். ஒரு நாட்டின் தேசியத் தொழிலை அந்நாட்டு அரசாங்கமே அழிக்கும் அவலம் பழம்பெருமை மிக்க பாரதத்தில் மட்டுமே! முந்திய தி.மு.க அரசு நிலமில்லா ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் இலவசம், விவசாயக் கடன் அறவே தள்ளுபடி என்ற வாக்குறுதிகளைக் கூறி பதவியேற்றது. அந்த தி.மு.க வினர்…

Rate this:

இராமசாமி நாயக்கரும் சுப்பிரமணிய அய்யரும ்

இருக்குறதெல்லாம் பொதுவா போன பதுக்குற வேலை இருக்காது… என்ற பழம்பெரும் சினிமாபாடல் வரிகளுக்கு ஏற்ப எல்லாருமே பொதுவானவர்களாக இருந்தவரை சுகமாக இருந்தது தேசம். ஆனால் இன்று தேசத் தலைவர்களே சாதி, சமுதாயங்களுக்கு குறுக்கப்படுகின்றனர், அவர்களது சமுதாயத்தால் பதுக்கப் படுகின்றனர். தமிழகத்தில் தலைசிறந்த முதலமைச்சராக, பாரத பிரதமரையே தேர்ந்தெடுக்கும் திறன்பெற்றவராக, ஏழைகளுக்காக வாழ்பவராக, சுயநலமற்ற தன்மானச் சிங்கமாக விளங்கியவர் கர்மவீரர் காமராசர் அவர்கள். இன்று அனைத்து நாடார் சமுதாய கல்வி நிறுவனங்களும் கல்விக்கண்திறந்த படிக்காத மேதை காமராசர் பெயரில்…

Rate this:

இந்திய இணையதளங்கள்

சீனாவில் கூகுள், பேஸ்புக், விக்கிபிடியா முதலிய முக்கியமான 56 இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. உலக இணையத்தில் இந்த தளங்கள் இல்லாமல் வேறு எந்த தளங்களும் அவ்வளவு முக்கியமானவை அல்ல. கம்யூனிச நாட்டில் இவையாவும் சாத்தியம். ஆனால் ஜனநாயக தேசமான பாரதத்தில் இணைய தளங்கள் மோசமாக இருக்கின்றன். நம் நாட்டில் அவ்வாறு எந்த குறிப்பிட்ட தளத்தையும் தடை செய்ய இயலாது. அதே நேரம் நம்நாட்டு இணையதளங்கள் இவ்வளவு மௌசமாக போவது இளைய சமுதாயத்திற்கு வளமான எதிர்காலத்தைத் தராது. ப்ளாக்கர்…

Rate this:

உலகின் முதல் மனிதன் தமிழன்!

தமிழே உலகத்தாய் மொழி என்று தேவனேய பாவாணார் கூறுகிறார். தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி. தமிழர் நாகரிகமே உலகின் முதல் நாகரிகம். தமிழனே உலகின் முதல் மனிதன். அது எவ்வாறு எனக் காண்போம். தமிழ் திராவிட மொழிகளில் மூத்த மொழி என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். அது அனைவருக்கும் கண்கூடாக்த் தெரிந்த ஒன்றே. தமிழின் மூன்றாம் தமிழ்சங்கம் மதுரையில் இயங்கியது. அதன் தலைவராக மாங்குடி மருதனார் சிலகாலம் இருந்தார். திருக்குறள் மூன்றாம் தமிழ்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது. திருக்குறள்…

Rate this: