ஜல்லிக்கட்டு கீதம்

மாட்டுக்கொரு நீதிகேட்டு மானமுள்ள தமிழங்க வந்தோமய்யா மெரினாவில் கூட்டங்கூடி மெர்சலாக போராட்டம் செஞ்சோமய்யா அண்ணன் தங்கை போல் நாங்க ஒன்னா நின்னோம் அன்பும் பண்பும் தமிழோட கண்ணு என்றோம் பீட்டாவ பின்னோக்கி ஓடவச்சோம் பிடிவாத கவருமண்டும் பேச வச்சோம் ஜல்லிக்கட்டுக்கோர் வந்த தடைய ஒடச்சோம் இன்று துள்ளிக்கிட்டு மாடுவர தழுவி மகிழ்ந்தோம் மாடுபிடி வீரரும் வாடிவாசல்காரரும் கோடிசனக்கூட்டமும் கூடிவந்த வேளையில் கொம்பன் குதிக்க தெம்பன் பிடிக்க தம்பியை போல் இவன் தழுவி அணைக்க மாடும் மறவனும் போடுமிப்…

Rate this:

வையம் வெல்ல யுக்தி

தினகரன் கையில் இரு இலை போனால் கனலில் கருக்குமென கருதியதாரோ? பன்னீர் தெளித்து பழனியில் கொடுத்த பாரதம் ஆளும் பக்தர்கள் கூட்டம் தென்னகம் நோக்கி திட்டம் வகுக்க, தாமரை மலரின் தாளினை தாங்க பாமரனல்ல பழந்தமிழ் மக்கள்! காந்த விசையில் கவிழ்ந்திட மாட்டோம் கமல மலரையும் கைத்தொழ மாட்டோம் தேர்ந்த அறிவுடன் தெளிந்த என் கூட்டம் தேர்தல் அரசியலில் தோற்றிட மாட்டோம் உதித்த சூரியன் உறங்க போனான் எதிர்த்த கையினன் இறங்கி போனான் இலைக்கு உரியவர் இறந்த…

Rate this:

ஆண்டவரும் தலைவரும்

ஆண்டவரும் தலைவரும் வேறென்பர் புரிவிலார்! ஆளுமைகள் எதிர்நின்றால் பகையென்பர் தெரிவிலார் !! அண்ணாமலையாரும் ஆளவந்த நாயகனும் அரசியலால் அந்நியராம், அன்பில் அண்ணன் தம்பியராம். இவர்கள் இணைந்தும் நடித்ததுண்டு இடமாறியும் நடித்ததுண்டு பரட்டை-சப்பானி பல்லாண்டு போற்றப்படும் பாலச்சந்தர் பட்டறையில் பகைமையா ஊற்றப்படும்? இந்தியன் இவருக்கும் எந்திரன் அவருக்கும் எழுதப்பட்டது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? தெனாலி திரைப்படத்திற்கு தேர்ந்த பெயர் வைத்தவர் "கபாலீ"ஸ்வரன். ஆறு"படையப்பா"வின் அளவை நிர்ணயித்தது ஆழ்வார் பேட்டை ஆண்டவன். நவம்பர் ஏழில் நம்மவரை நாடெல்லாம் வாழ்த்தட்டும்…

Rate this:

கமலஹாசன் கவிதைகள்

கிரகணாதி கிரகணங்கட்கப்பாலுமே ஒரு அசகாய சக்தி உண்டாம் ஆளுக்கு ஆளொரு பொழிப்புரை கிறுக்கியும் ஆ(யா)ருக்கும் விளங்காததாம் அதைப்பயந்ததையுணர்ந்ததைத் துதிப்பதுவன்றி பெரிதேதும் வழியில்லையாம் நாம் செய்த வினையெலாம் முன்செய்ததென்பது விதியொன்று செய்வித்ததாம் அதை வெல்ல முனைவோரைச் சதிகூடச் செய்தது அன்போடு ஊழ் சேர்க்குமாம் குருடாகச் செவிடாக மலடாக முடமாகக் கரு சேர்க்கும் திருமூலமாம் குஷ்டகுஹ்யம் புற்று சூலை மூலம் குரூரங்கள் அதன் சித்தமாம் புண்ணில் வாழும் புழு புண்ணியம் செய்திடின் புதுஜென்மம் தந்தருளுமாம் கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல்…

Rate this:

அய்யப்ப அந்தாதி

அய்யப்ப சரணம் கூறி அகம் புறம் சுத்தம் செய்து தையினில் சோதிகாண தவவாழ்வு மேற்கொண்டோர்க்கு வையத்தில் துன்பமில்ல வாழ்வினில் தாழ்வு இல்லை நெய்யுடன் தெங்காய் தாங்க நேர்ந்திடு சாமிமாரே சாமிமாராக வாழ சம்மதம் உள்ள மக்கள் பூமியில் வெறுங்கால் நடந்து புசித்தலை ஒருக்காலாக்கி தீமையின் பழக்கம் தன்னை திறம்பட புறக்கணித்து ஆமை அடக்கம் போல ஐம்பொறி ஆள வேண்டும் வேண்டுவார் வேண்டியதெல்லாம் வேந்தனே வழங்கிடுவான் பாண்டியன் வளர்ந்த பிள்ளை பம்பையின் பாலன் தன்னை ஆண்டுக்கு ஒருநாளேனும் அன்புடன்…

Rate this:

சுப்பிரமணிய பாரதிக்கு பால சுப்பிரமணிய ஹர ிஹரசெல்வனின் கவிதாஞ்சலி

எட்டையாபுரக் கவிஞன் பாரதி‍ எங்கள் எல்லோரின் மனம் நிறைந்த பாரதி செழியத் தமிழ் பன்பாட்டின் சாரதி எங்கள் அழகுத்தமிழ் அறிஞர் புலவர் பாரதி காசிமா நகரில் கல்வி கற்றவர் இந்த‌ மாசிலா மொழியில் இவர் கொற்றவர் பேசுமொழி ஐந்தில் பெரும் வித்தகர் பரத‌ தேசம் போற்றி பாடல் பாடி வைத்தவர் செக்கிழுத்த செம்மலுடன் பழகினார் எங்கள் தெக்குதிசை மண்னில்தினம் உலவினார் மக்களைத்தன் பாடலாலே எழுப்பினார் கொடும் உக்கிரமாய் அச்சம்தனை விலக்கினார் பாட்டினிலே பலநீதி சொன்னவர் இந்த‌ நாட்டிலுள்ள…

Rate this:

கடிகாரம்

உழைக்கும் மனிதர்களின் கைகளுக்கு அலங்காரம். கையில் கடிகாரம். இது பித்தளிதானென்று மெத்தனம் கொள்ளாதீர். காட்டுவது பொன்னான நேரம்! மனித இதயத்துடன் ஒரு இயந்திரப்போட்டி இடைவிடா உழைப்பு. ஓடிக்கொண்டிருக்கும்வரை மட்டுமே உற்றுப்பார்க்கப்படும் சிறப்பு ஒவ்வொருமனிதரும் உணரவேண்டிய குறிப்பு. சின்னமுள்ளாய் நீ, பெரியமுள்ளாய் நான். சேர்ந்து சுற்றுவோம் வா. ‍ புதுக்கவிதை படைத்தான் நவயுகக்கவிஞன். இதனைப் பெருமாளுடன் ஒப்பிட்டார் பைந்தமிழ் கவி. ஓடாதகடிகாரம் கூட ஒருநாளுக்கு இருமுறை சரியான நேரம் காட்டும்.

Rate this: