திருநாமத்தின் பெருமை

அரியாங்குப்பம் என்னும் ஊரில் யுகேந்திரன் என்பவன் மனைவியோடு வாழ்ந்து வந்தான். அவன் சரியான முட்டாள். ஒருநாள்- “”நம்ம ஊருக்குப் முனிவர் ஒருவர் வந்திருக்கிறார். அருமையாகப் பக்திச் சொற்பொழிவு செய்கிறார். மக்கள் எல்லாரும் அவரிடம் சென்று வாழ்த்துப் பெறுகின்றனர். நீங்களும் அவரிடம் சென்று எப்படி வாழ வேண்டும் என்று கேளுங்கள்,” என்றாள் மனைவி. முனிவர் இருக்கும் இடத்தை அடைந்தான் யுகேந்திரன். “திருநாமத்தின் பெருமை’ பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் முனிவர். அவரின் அருகில் சென்ற அவன், “”ஐயா! நான் எப்படி…

Rate this:

வெற்றி நமக்குத்தான்!

இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது. எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை சிறிதும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர். என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாம் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்? கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக்…

Rate this:

புதையல்

திருவெண்ணெய் நல்லூரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எந்த பொருளை பார்த்தாலும் அதைத் தான் அடைய வேண்டும் என நினைப்பான். எனவே, நாளடைவில் பார்த்தசாரதி என்ற அவனுடைய பெயரே மறைந்து போய் பேராசைக்காரனாயிற்று. ஒரு நாள்— வெளியூருக்கு வியாபார நிமித்தமாக வண்டியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்றான். வியாபாரம் முடிந்து காட்டு வழியாக வந்து கொண்டிருந்தான். தண்ணீர் வேட்கை கொண்ட அவன் கண்களுக்கு கிணறு ஒன்று தெரிந்தது. வண்டியை விட்டு இறங்கிய அவன் அந்தக் கிணற்றருகே…

Rate this:

என்ன மன்னிச்சுக்கோங்க சார்!

அந்த சின்ன கிராமத்துல அஞ்சு வருஷம் முன்னால செத்துப் போன சேகரனப் பாப்பேன்னு சத்தியமாக் கனவுல கூட நெனக்கலை. அதுவும் அவன் சாவுக்குப் போய் மாலையெல்லாம் வேற போட்டுட்டு வந்திருக்கற எனக்கு ரொம்ப பெரிய அதிர்ச்சி. பாங்கில் இருந்து ரிடையர்மென்ட் ஆனதுக்கு அப்புறம் போர் அடிக்குதேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அப்போதான் என் பால்ய சிநேகிதன் ராஜா அவன் சொந்த ஊர் மயிலாடிக்கு வர்றியானு கேட்டான். அந்த ஊரு முருகனுக்கு ஆராட்டு விழா ரொம்ப சிறப்பா நடக்குமாம். ஒரு…

Rate this:

காற்று வெளியிடை

“எஸ்.ஐ சார் உங்களுக்கு சி.பி.ஐல இருந்து போன் வந்திருக்கு” என 415 கத்தியதும் தூங்கி வழிந்துகொண்டிருந்த சின்னவேடம்பட்டி போலிஸ் நிலையம் திடீரென பரபரப்பானது. “சிபிஐல இருந்து போனா?எனக்கா? இன்னிக்கு என்ன ஏப்ரல் ஒண்ணு கூட இல்லையே?” என அதிர்ச்சி விலகாமல் போனை வாங்கினார் எஸ்.ஐ சண்முகம் மறுமுனையில் பேசிய ஆங்கிலமும் அவருக்கு புரியவில்லை, இந்தியும் புரியவில்லை. ” இங்கிலீசை கூட இந்தி மாதிரியே பேசறானுங்க” என ஏட்டிடம் அலுத்து கொண்டார். “ஐ டோன்ட் அன்டர்ஸ்டாண்டு யுவர் இந்தி…

Rate this:

தாய்ப்பசு

பட்டணத்துப் பால்காரன் மாடசாமியின் வீட்டு பசுமாடு ஒரு காளைக் கன்றுக்குத் தாயாகி இருந்தது. பசுவுக்கு இது இரண்டாவது ஈற்று. முதலில் பிறந்த கிடாரிக் கன்று வளர்ந்து பெரிதாகி எங்கோ கைமாறிப் போய்விட்டது. இப்போது இது இரண்டாவது குழந்தை; ஆண்குழந்தை அது அங்குமிங்கும் துள்ளிக் குதித்து ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தது. தாய்ப்பசுவுக்குப் பெருமை தாங்கவில்லை. மடி நிறையப் பால் சுரந்திருந்தும்கூட, அதைக் குடிக்காமல், இப்படி முட்டி மோதிக்கொண்டு எந்தப் பிள்ளையாவது விளையாடித் திரியுமா? சீம்பாலைக் கறந்து விற்க முடியாது…

Rate this: