நங்கநல்லூர் தெரியுமா?

நங்க நல்லூரைப் பற்றி என்ன சொல்லலாம்? ஒரு பழைய கிராமம் புதிய பரிமாணத்தில் என்றா? ஒரு அதிசய ஊர்? குட்டி காஞ்சிபுரம், சின்ன கும்பகோணம்? மூத்தோர் வாழுமூர்? ஏன் இப்படிச் சொன்னால் ஒருவேளை பொருத்தமாயிருக்குமோ? ஒரு புறம் பார்த்தால் திருவல்லிக்கேணி, மறுபுறம் பார்த்தால் மாம்பலம், ஒருகோணத்தில் அடையார், வேறு பார்வையில் நுங்கம்பாக்கம். மொத்தத்தில் இங்கு எல்லா கோவில்களும் உள்ளன. அதனால் வெல்லத்தை மொய்க்கும் ஈயாக முதியோர், ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள் வந்து குடியேறி விட்டனர். நிலத்தின் விலை…

Rate this: